"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ".. 7 ஸ்வரங்களின் கான சரஸ்வதியான பாடகி வாணி ஜெயராம்!
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதியாக அழைக்கப்பட்ட வாணி ஜெயராம்
சென்னை: மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் மூலம் புதிய பாடகியாக அறிமுகமான வாணி ஜெயராம் நிறைய பாடல்களை பாடியுள்ளார்.
இந்த பாடலை விளம்பரப்படுத்தும் அளவுக்கு வாணி ஜெயராமின் தேன் குரல் அமைந்திருந்தது. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வேலூரில் கலைவாணியாக பிறந்தார். இவரது குடும்பம் ஐயங்கார் குடும்பமாகும். இவர் கடலூர் ஸ்ரீனிவாச ஐயங்கார், டி.ஆர். பாலசுப்பிரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையை கற்றுத் தேர்ந்தார்.
இசையை பயின்று கொண்டே சிலோன் வானொலியில் லதா மங்கேஷ்கர், முகமது ரவி, மன்னா டே ஆகியோரின் பாடல்களை கேட்டு தானும் திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசை வாணி ஜெயராமுக்கு ஏற்பட்டது.

ராணி மேரி கல்லூரி
இவர் சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இவருக்கு வேலை கிடைத்தது. திருமணத்திற்கு பிறகு பணி மாறுதல் வாங்கிக் கொண்டு மும்பையில் வசித்தார். வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கணவராக ஜெயராம் இருந்தார். இதையடுத்து வாணி, உஸ்தாத் அஹ்மத் கானிடம் இந்துஸ்தானி இசை கற்றுக் கொண்டார்.

வங்கி வேலையை ராஜினாமா
இதையடுத்து தனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு தீவிர இசையில் இறங்கினார். வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு நிறுவனமாக சென்ற வாணி ஜெயராமின் குரலை கேட்டவுடன் யாராலும் வாய்ப்பு இல்லை என சொல்லவே முடியவில்லை. 1971 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வெளிவந்த குட்டி என்ற இந்தி படத்தில் வசந்த தேசாயின் இசையில் போலே ரே பப்பி ஹரா என்ற பாடலை பாடினார். அந்த பாடல் நாயரி ஜெயா பாதூரிக்கு (ஜெயா பச்சன்) பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தமிழிலும் வாய்ப்பு
தமிழகத்தில் பிறந்த வாணி ஜெயராம் இந்தியில் ஹிட்டடித்துவிட்ட நிலையில் தமிழக இசையமைப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பார்களா? அப்படி வந்ததுதான் தீர்க்க சுமங்கலி படத்தில் வெளியான மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடலாகும். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பாடல் விளம்பரப்படுத்தப்பட்டு மிகவும் பிரபலமடைந்தது. அந்த அளவுக்கு அனைவரையும் இந்த குரல் ஈர்த்தது.

வீட்டுக்கு வந்த மருமகள்
இந்த படத்திற்கு முன்பே வெளியான 1973 ஆம் ஆண்டு வீட்டுக்கு வந்த மருமகள், சொல்லத்தான் நினைக்கிறேன் ஆகிய படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் தீர்க்க சுமலங்கலிதான் அவரை பெருமைப்படுத்தி புகழடையச் செய்தது. இவர் பாடாத இந்திய மொழியே இல்லை என சொல்லலாம். மதங்களை கடந்து பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறார். சங்கராபரணம் படத்தில் மானஸ ஸஞ்சரரே எனும் பாடியமைக்காக 1980 இல் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வெளியான கட்டிக் கரும்பே கண்ணா பாடலை பாடியுள்ளார்.

கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம், என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம் போன்ற கடினமான பாடல்களையும் பாடியுள்ளஆர். இவர் பாப், பஜனை, நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். பிறந்தது தமிழகமாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி , மராத்தி, ஒடியா, குஜராத்தி, பெங்காளி உள்ளிட்ட மொழிகளில் பாடியள்ளார். இவருக்கு தற்போது 77 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக இவர் மறைந்தாலும் இவரது பாடல்கள் இந்த வானமும் பூமியும் இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications