மஞ்சள் படை அணிவகுப்பு! 2,000 இளைஞர்கள் ரெடி! ராமதாஸிடம் ஆலோசனைக் கேட்ட வன்னியர் சங்கத் தலைவர்!
சென்னை: வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்படவுள்ள மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை குறித்து பாமக நிறுவனர் ராமதாசிடம் ஆலோசனைக் கேட்டிருக்கிறார் பு.தா. அருள்மொழி.
கடந்த மார்ச் 18ஆம் தேதி அன்று வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் வன்னியர் சங்கத்தின் சார்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் நடப்பாண்டில் வன்னியர் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அந்த வகையில் வன்னியர் சங்கம் சார்பில் மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வன்னியர் சங்கத்தலைவர் பு.தா. அருள்மொழியும், வன்னியர் சங்கத் துணை தலைவர் ரவி ராஜூம் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து அது தொடர்பான டிஸ்கஷனில் ஈடுபட்டனர்.
மேலும், மஞ்சள் படை அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்க உள்ள இரண்டாயிரம் இளைஞர்களின் பெயர் பட்டியலையும் ராமதாஸிடம் வழங்கினர். அதுமட்டுமல்ல அக்னிக்கலசம் தாங்கிய மஞ்சள் நிற டீஷர்ட், கைகளுக்கு வெள்ளை உறை, தொப்பி, அடையாள அட்டை, சர்டிபிகேட் என அணிவகுப்பு மரியாதையின் போது அணிய வேண்டிய உடைமைகளையும் ராமதாஸிடம் காட்டினர்.
அவரும் சில திருத்தங்கள் கூறியிருப்பதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்படவுள்ள இந்த மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications