அந்த 21 பேரால்தான் உங்க மீட்டர் ஓடிக்கிட்டிருக்கு! அவங்களுக்கு என்ன செஞ்சீங்க?.. அன்புமணிக்கு சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வன்னியர் சங்கத்திற்கு ரூ 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்தால் கலங்கம் தீர்ந்துவிடுமா என பாமக ராமதாஸுக்கு வாழப்பாடி ராமூர்த்தியின் மகன் வாழப்பாடி ராமசுகந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமார ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் கரு பலரால் பேசப்பட்டு வரும் நிலையில் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதனால் நடிகர் சூர்யாவுக்கு கண்டன கடிதங்களும் வாழ்த்து கடிதங்களும் குவிகின்றன. அவர் இரண்டிற்கு உரிய பதிலை நாகரிகமாக கொடுத்து வருகிறார்.

குற்றவாளி

குற்றவாளி

ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தயாரிப்பாளர் ஜோதிகா

தயாரிப்பாளர் ஜோதிகா

இந்த நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாயை அபராதமாக வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்திற்கு ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூர்யா அட்வைஸ்

சூர்யா அட்வைஸ்

இதனிடையே #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு இருளர் சமூகத்தினருக்கு அரசு தேடி தேடி உதவிகளை செய்து வருகிறது. இதனாலும் இந்த படம் பேசப்படுகிறது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக சில கட்சிகள் இது போல் சூர்யாவை குறை கூறி வருவதாக அவரது ரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். எனினும் அவர்களை கோபப்படக் கூடாது என சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.

Recommended Video

    எனக்கு அந்த அவசியமும் இல்லை | Anbumani-கு பதிலடி கொடுத்த Suriya | JaiBhim | Oneindia Tamil
    ராமசுகந்தன் கேள்வி

    ராமசுகந்தன் கேள்வி

    இந்த நிலையில் பாமகவின் வக்கீல் நோட்டீஸ் குறித்து வாழப்பாடி ராமசுகந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் வன்னியர் சங்கத்திற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்தால் கலங்கம் தீர்ந்துவிடுமா

    @draramadoss? 21 வன்னியர்களின் உயிர் தியாகத்தால் தான் இன்றும் உங்களுடைய மீட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது ! அந்தக் குடும்பத்தினருக்கு வன்னியர் சங்கமும் பாமகவும் என்ன செய்தது ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+