Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீராணம் ஏரி என்ன இப்படி ஆகிடுச்சு.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியின் நிலையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி வறண்டு போகும் நிலையில் காணப்பபடுகிறது. இந்த ஏரியில் தற்போது, வெறும் 21 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 கோடி மக்கள் வசிக்கிறார்கள். சென்னை நகருக்குள்ளேயே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.. சென்னை மக்களுக்கு குடிநீர் தினசரி வழங்க செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் தேக்கப்படுகிறது.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு வடகிழக்கு பருவ மழை தான் முக்கிய நீர் ஆதாரம், இதுதவிர ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீரும் சென்னைக்கு குடிநீர் நீர் ஆதாரமாக விளங்குகிறது.

Veeranam Lake one of the lakes that supply drinking water to Chennai city

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி (13.22 டி.எம்.சி.) ஆகும். ஆனால் இதில அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 9 ஆயிரத்து 217 மில்லியன் கன அடி (9.2 டி.எம்.சி.) இருப்பு இருக்கிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தினமும் சராசரியாக ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, மாதம் 1 டி.எம்.சி. வரை குடிநீருக்கு விநியோகிக்கப்படுகிறது. நீர் வேகமாக குறைவதுடன், வெயில் காரணமாக ஏரிகள் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது,

குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 188 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 16, புழல் ஏரியில் இருந்து 189 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 130 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இது தவிர கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் இருந்து கணிசமாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனிடையே சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி. 1,465 மில்லியன் கன அடி(1.4 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இந்த ஏரியாகும்.. இதில் தற்போது, வெறும் 21 மில்லியன் கன அடி(1.43 சதவீதம்) மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் இங்கிருந்து குடிநீருக்காக 48 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் வீராணம் ஏரியில் 1,221 மில்லியன் கன அடி(1.2 டி.எம்.சி.) இருப்பு இருந்தது. ஆனால் தற்போது வெறும் 21 மில்லியன் கன அடி இருப்பதால் விரைவில் இந்த ஏரி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே வீராணம் ஏரியை நிரப் அதிகாரிகள் புதிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+