என்ன டீசர் இது? எங்கப்பா என்ன சைக்கோவா? அவர் கடவுள் தன்மை கொண்டவர்..வீரப்பன் மகள் வித்யா கொந்தளிப்பு
சென்னை: எங்கப்பா என்ன சைக்கோவா, அவர் எத்தனை கடவுள் தன்மையான மனுஷன் என வீரப்பன் பட டீசரை கண்டு அவருடைய மகள் கொந்தளித்தார்.
சந்தன கடத்தல் வீரப்பன் தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே உள்ள வனப்பகுதியில் சந்தன மரங்களை கடத்தி பலரை கொன்றதால் அவரை என்கவுன்ட்டர் செய்து பிடிக்க தமிழக காவல் துறையில் டீம்கள் உருவாக்கப்பட்டன.
1990களில் நடிகர் ராஜ்குமாரை சந்தனகடத்தல் வீரப்பன் கடத்தி பின்னர் நக்கீரன் கோபால் தமிழக அரசு சார்பில் தூதுவராக சென்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பத்திரமாக மீட்டார். இவர் 130 கோடி மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தினார் என புகார் உள்ளது.
அதன்படி கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் விஜயகுமார் ஐபிஎஸ் தலைமையிலான தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இவர் மறைந்து 19 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் குறித்து படங்கள், சீரியல்கள், வெப் சீரிஸ் என ஏதாவது ஒரு இடத்தில் பேசப்பட்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் வீரப்பன் தேடுதல் வேட்டையை மையப்படுத்தி உருவான படம்தான் தி ஹண்ட் ஃபார் வீரப்பன். இது ஒரு ஆவணப்படம், வீரப்பனை குறித்து பலரும் அறிந்திடாத தகவல்கள் இந்த படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் நெட்பிளிக்ஸில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகிறது. இது குறித்து பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் சமூகவலைதளங்களில் கிளம்பிவிட்டன.
இந்த நிலையில் பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் வீரப்பனின் மகள் வித்யா பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் படத்தின் மேக்கிங்கை பார்த்தால் தரமாக எடுத்துள்ளார்கள் என்றுதான் தெரிகிறது. ஆனால் டீசரில் அப்பாவை பற்றி குறிப்பிட்டிருக்கும் வசனங்கள் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீசரில் அப்பாவை ராபின் ஹூட் என டீசரில் சொல்கிறார்கள். அத்துடன் அவரை கடத்தல்காரன் என்றும் சொல்கிறார்கள். எனது அப்பா தன்னை சுற்றியிருந்தவர்களுக்கு கடவுளாகவே காட்சி அளித்தார்.அவர் சுயநலமாக இல்லை. அப்படியிருந்திருந்தால் எங்களுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பார்.
இந்த ஆவணப் படத்தை பார்த்து அப்பாவை பற்றி மக்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளக் கூடும். அப்பா குறித்து படமாக்கப்படும் போது அப்பாவை மிஞ்சிய வீரன் யாருமில்லை என்ற எண்ணம் வருகிறது. மேலும் இரு மாநில மக்களை பிணையில் வைத்துக் கொண்டு அப்பா பணம் வாங்கியதாக டீசரில் காட்டியுள்ளார்கள்.
மனித உருவில் இருக்கும் காட்டு விலங்கு என அப்பாவை சொல்கிறார்கள். என் அப்பா என்ன சைக்கோவா, எவ்ளோ கடவுள் தன்மையான மனுஷன்? மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு வாழ்ந்த அவரை விலங்குகளுடன் ஒப்பிடலாமா, எனக்கு இது வருத்தத்தை கொடுக்கிறது. இவ்வாறு வித்யா தெரிவித்தார்.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications