கிண்டல் செய்துவிட்டு கொள்ளென சிரித்த கொங்கு ஈஸ்வரன் ! கொந்தளித்த வேல்முருகன்! அதிர்ந்த அப்பாவு
சென்னை: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் ஈஸ்வரன் சொன்ன ஒரு வார்த்தையால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கொந்தளித்த சம்பவம் தமிழக சட்டசபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர்.

அப்போது ஈஸ்வரனை பேசுமாறு சபாநாயகர் அழைத்துவிட்டு, "ஏற்கெனவே நிறைய விஷயங்களை வேல்முருகன் பேசிவிட்டார். எனவே நீங்கள் சுருக்கமாக பேசுங்கள்" என்றார். அதற்கு ஈஸ்வரன் ஒரு வார்த்தையை விட்டுவிட்டார், உடனே அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
உடனே வேல்முருகன் பேசுகையில், நான் பாட்டாளி மக்கள் கட்சியில் பல பொறுப்புகளில் இருந்து விட்டு வெளியே வந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துடன் தொடங்கினேன். தமிழக மக்களின் உரிமைக்காக போராடி வருகிறேன். எனவே என்னை எந்த ஜாதி வட்டத்திற்குள்ளும் அடைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னணி: சட்டசபையில் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் பேசுகையில் தமிழக அரசின் சார்பில் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வந்த அரசின் தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்கிறது.
அதே வேளையில் அந்த தீர்மானத்தில் ஒரு திருத்தம் தேவை. மத்திய அரசு சமூக நீதிக்கு எதிரானது. இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம், முல்லை பெரியாறுக்கு எதிரான தீர்மானம், நீட்டுக்கு எதிரான தீர்மானம் போல ஜாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தையும் மத்திய அரசு குப்பைத் தொட்டியில் போட்டுவிடும்.
ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடிதம் எழுதியதற்கும் பதில் இல்லை. ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த இந்த அரசினர் தீர்மானத்திற்கு பதில் அளிக்கவில்லை என்றால் தமிழ்நாடு அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கும் எனவும் மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம். கண்டிப்பாக எதிர்வரும் காலங்களில் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று நேர்மறையான பதிலை முதல்வர் ஸ்டாலின் அளித்து இருக்கிறார். சமூக நீதிக்கு போராடிய 21 போராளிகளில் 9 பேர் வாழ்ந்த இடம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றால் பீகார், ஒடிஸா போன்ற மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தது போல தமிழக அரசும் எடுக்க வேண்டும். பிஹார் மாநில உயர் நீதிமன்றம் அந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கவில்லை.
இந்தியாவில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று தடை இல்லை. 10.5% இடஒதுக்கீடு கேட்கும் வன்னியர்கள், மற்ற சமூகத்தினரை விட வேலைவாய்ப்பில், கல்வியில் என எந்த விதத்தில் பின்தங்கி உள்ளார்கள் என்ற தரவுகளை கொண்டு வரச் சொல்லி தான் உள்ளார்கள். எதிர்க்கட்சிகள் அவர்களுக்கான அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.
அது போல் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கேள்வி நேரத்துக்கு பிறகு நேரமில்லா நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச நேரம் தருகிறார்கள்.
எதிர்க்கட்சினருக்கு எனது வேண்டுகோள் கேள்வி நேரத்துக்கு பின் நேரமில்லா நேரத்தில் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்ய வைக்க வேண்டும். பேரவை தலைவர் நேரம் அளித்தார். ஆனால், அதிமுகவினர் வர மறுக்கிறார்கள். ஏற்கெனவே நாங்கள் பேசிய நேரத்தில் அவர்கள் பேசியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவினருக்கு பங்கு இருக்கிறதா இல்லையா என்பதை விட அரசு சட்டம் இயற்ற வேண்டும். ஒரு கிராமத்தில் கள்ளச் சாராய பிரச்சினை நடக்கிறது என்றால், அதற்கு அந்த பகுதி சார்ந்த அமைச்சர், அதிகாரிகள், ஆட்சியர் அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசியல் ரீதியான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு அனைவரும் இதற்கு பொறுப்பேற்கப்பட வேண்டும்." என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications