ஹெச்.ராஜாவை கைது செய்யாவிட்டால்... மெரினாவில் குவிந்திடுவோம்... வேல்முருகன் எச்சரிக்கை
சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லை என்றால் அறிவிப்பின்றி மெரினாவில் குவிந்திடுவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர் இதனைக் கூறினார்.
மேலும், நேரம் குறிப்பிடாமல், நாள் குறிப்பிடாமல் மெரினாவில் திரண்டு ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்துவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

கண்டனம்
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் சென்னையில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின. அதில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்க
நெல்லை கண்ணனை கைது செய்வதில் காட்டிய அக்கறையை ஹெச்.ராஜாவை கைது செய்வதிலும் தமிழக காவல்துறை காட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கல்லூரிக்குள் குண்டு போடுவது உள்ளிட்ட பல ஹெச்.ராஜாவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குவிவோம்
ஹெச்.ராஜாவை காவல்துறை கைது செய்யவில்லை என்றால் அறிவிப்பின்றி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மெரீனாவில் போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரித்தார். நேரம், நாள் தெரிவிக்காமல் பெருமளவில் குவிந்துவிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமா கருத்து
பாஜகவினரை கண்டு அதிமுக அச்சம் கொள்கிறதோ என்ற சந்தேகம் தனக்கு எழுந்துள்ளதாகவும், அதிகாரத்தை பறித்து விடுங்கள் என்ற அர்த்தத்தில் தான் நெல்லை கண்ணன் பேசியதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சட்டத்திற்கு முன்
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும், பெரியார் குறித்தும், நீதிமன்றம் குறித்து ஹெச்.ராஜா பேசிய போது அவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications