சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைகளை தாய்மொழி பேச ஊக்குவிக்க வேண்டும்! பெற்றோர்களுக்கு வெங்கையா நாயுடு கொடுத்த அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : குழந்தைகளை தாய்மொழி பேச பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மறைந்த இசைக்கலைஞர் கண்டசாலாவின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பின்னனி பாடகி எல்ஆர் ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தவிழாவில் பேசிய வெங்கையா நாயுடு, கண்டசாலாவின் மெல்லிய குரல் தலைமுறையை தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றும் கண்டசாலாவின் குரல் தனித்தன்மை உடையது. கண்டசாலா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியன் பாடல்களை நான் விரும்பி கேட்பேன்.

Venkaiah Naidu request parents to encourage their children to speak mother tongue

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு நமது வாழ்வியலில் ஒன்று அதனை பாதுகாக்க வேண்டும் என பேசிய வெங்கையா நாயுடு.தமிழ்மொழி மிகவும் பழமையானது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தாய்மொழியில் பேச ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வெங்கையா நாயுடுவை தொடர்ந்து பேசிய தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்," தமிழகம் மீதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீதும் அதீதி அன்பைக் கொண்டவர் வெங்கையா நாயுடு, னைவரையும் மதிக்கத் தெரிந்தவர் வெங்கையா நாயுடு. மிழகம் மக்கள் கலை பண்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள் என குறிப்பிட்டார்.

English summary
Former Vice President Venkaiah Naidu has requested parents to encourage their children to speak their mother tongue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X