சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீயா".. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.. 7 முறை அலறி அலறி ஓடிய விவசாயி.. என்னன்னு பாருங்க

7 முறை விவசாயியை ஒரு பாம்பு பழி வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: விவசாயியை ஒருவரை பாம்பு ஒன்று பழிவாங்கி கொண்டே இருக்கிறதாம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

பாம்பு போன்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களில்தான் நாம் வீடு கட்டி கொண்டு வாழ்ந்து வருகிறோம்.. ஆனால், நம்முடைய இடத்துக்கு பாம்பு வந்துவிட்டதாக நினைக்கிறோம்.. எனவே இதுவே தவறான கருத்து.

சனிக்கிழமைகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை?.. தமிழக அரசு பரிசீலனை சனிக்கிழமைகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை?.. தமிழக அரசு பரிசீலனை

அதேபோல, பாம்புகளை கண்டதும் நாம் ஒதுங்கி நின்றுவிட்டால், அது நம்மை கடந்து போய்விடும்.. பாம்புகள் மட்டுமல்ல, மற்ற உயிரினங்கள்கூட, தங்களுக்கு ஆபத்து நேரும்போதுதான், தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக தாக்குதல் நடத்துகின்றன...

அடையாளம்

அடையாளம்

உண்மையை சொல்லப்போனால் நம்மை பார்த்ததும் பாம்புகள் வேகமாக ஓடி ஒளிந்துகொள்கின்றன.. அடிபட்ட பாம்புகளை பொருத்தவரை அவைகள் உயிருடன் இருப்பதே கடினம். அப்படியே உயிருடன் இருந்தாலும் அது ம்மை உங்களைக் கண்டு பயந்துகொண்டிருக்கும்... அதனால், அடையாளம் வைத்துக்கொண்டு, பழி வாங்கும் அளவுக்கு எல்லாம் பாம்புக்கு மூளை இல்லை... பார்வை திறனும் குறைவு... எனவே பாம்பு பழிவாங்கும் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை.. இதுவும் தவறான கருத்துதான்.

கற்பனை

கற்பனை

ஆனாலும், நீயா உட்பட பல சினிமாக்களில் பாம்புகள் பழிவாங்குவதாக காட்டப்படுகிறது.. அதுவும், ஜோடியாக இருக்கும் ஒரு பாம்பை கொலை செய்தால், இன்னொரு பாம்பு அந்த பாம்பை கொன்றவரை பழி வாங்குவதற்காகவே பல ஜென்மங்கள் எடுத்து வந்திருப்பதை கண்டிருக்கிறோம்.. இதெல்லாம் கற்பனை என்றாலும், நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. உபி மாநிலம் ராம்பூர் மாவட்டம் தானாஸ்வர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 விவசாயி

விவசாயி

எஸ்ஸான் அலி என்பவர் இந்த பகுதியில் வசித்து வருகிறார்.. இவர் ஒரு விவசாயி.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டின் அருகே ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.. அப்போது அங்கு இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது.. இதை பார்த்ததும் எஸ்ஸான் அலி அந்த பாம்பின் மீது கல்லை எரிந்து கொல்ல முயன்றார்.. அதில் ஒரு பாம்பு இறந்துவிட்டது... இன்னொரு பாம்பு உடனே அங்கிருந்து தப்பி எங்கேயே சென்றுவிட்டது.

 அலறல்

அலறல்

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியுள்ளது. இதனால் வலி பொறுக்க முடியாமல் எஸ்ஸான் அலி அலறி கத்தியுள்ளார்.. அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்தார்..

 உயிர் தப்பினார்

உயிர் தப்பினார்

ஆனால், மறுபடியும் அதே பாம்பு அங்கு வந்து, அவரை மீண்டும் அவரை கடித்துவிட்டது.. இப்படியே ஒரே பாம்பு மொத்தம் 7 முறை கடித்துள்ளது. 7 முறையும் உயிர் தப்பி உள்ளார்.. 7முறையும் அக்கம்பக்கத்தினர்தான் இவர் உயிரை காப்பாற்றியுள்ளனர். 7 முறை பாம்பு கடித்தால் தான் ஏற்கனவே பாம்பு ஒன்றாக இருக்கும்போது அதில் ஒன்றை மட்டும் கொன்றது தான் இதற்கு காரணம் என்றும், அதுதான் இப்படி வந்து தன்னை பழிவாங்குகிறது என்றும் எஸ்ஸான் அலி வலுவாக நம்புகிறாராம்.

English summary
Very unbelievable incident and snake wanted to revenge of a man and failed 7 times
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X