G.V.பிரகாஷ்-சைந்தவி, தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்தில் நடக்காதது.. விஜய் விஷயத்துல நடக்குது! ஒரே அவமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். சினிமா நட்சத்திரங்கள் விவாகரத்து கோருவது புதிதல்ல.. இருப்பினும் G.V.பிரகாஷ்-சைந்தவி, தனுஷ்-ஐஸ்வர்யா, ஏர்.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு விவாகரத்தில் நடக்காத சம்பவம் விஜய் விஷயத்தில் நடந்திருக்கிறது.

திரைத்துரை நட்சத்திரங்கள் விவாகரத்து செய்வது இப்போது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. திருமண வாழ்க்கை என்பது அன்பும், புரிதலும் கொண்டது. அது இல்லாமல் போகும்போது விவாகரத்துகள் அதிகரிக்கின்றன.

Vijay Divorce

G.V.பிரகாஷ்-சைந்தவி விஷயத்தில் நடந்தது என்ன?

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கை மகிழச்சியாகவே சென்றுக்கொண்டிருந்தது. இருப்பினும் இருவரும், ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வதை உணர தொடங்கினர். அவர்கள் விகாரத்துக்கு காரணமாக சொன்னதும் இந்த விஷயத்தைதான். இருவரும் சேர்ந்தே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர். அதிலும், சைந்தவி தங்கள் காதலையும், திருமண உறவையும் வெளியாட்கள் கொச்சைப்படுத்துவதை துளியும் விரும்பவில்லை.

G.V.பிரகாஷ் வேறு ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருந்ததுதான், இந்த விவாகரத்துக்கு காரணம் என்று சோஷியல் மீடியாக்களில் பேசப்பட்டது. இதனால் அப்செட் ஆன சைந்தவி, இந்த விவாகரத்துக்கு எந்த ஒரு மூன்றாம் நபரும் காரணம் கிடையாது என்று விளக்கமளித்தார். அதேபோல G.V.பிரகாஷ், "ஒரு தமிழனின் கண்ணியம் இவ்வளவு சீக்கிரம் குறைந்துவிட்டதா?" என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து

இந்த விவகாரத்திலும், இருவரும் சேர்ந்தே அறிக்கையை வெளியிட்டிருந்தனர். "கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தோம். இனி நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்க இருக்கிறோம்" என்று இருவரும் ஒரே நேரத்தில் இந்த அறிக்கையை தங்கள் சோஷியில் மீடியா பக்கங்களில் ஷேர் செய்திருந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் இருவருக்கும் இருக்கும் சிக்கல்களையும், அதை தீர்க்க முடியாது என்பதையும் விளக்கினர். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ஏர்.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு விவாகரத்து

"நாங்கள் திருமண வாழ்க்கையில் 30 ஆண்டுகளை எட்டுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எல்லாவற்றிற்கும் கண்களுக்கு தெரியாத முடிவு ஒன்று உண்டு. இருவருக்கும் இடையே இருந்த அன்புக்கு அப்பால் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதை யாராலும் நிரப்ப முடியவில்லை" என்று கூறி, சாய்ரா பானு விவாகரத்தை அறிவித்தார். அதே சமயம் இது, எங்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை. எனவே தனிப்பட்ட உறவுக்கு மதிப்பளியுங்கள் என்று கோரினார்.

இந்த நேரத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில் கிதார் கலைஞராக இருந்த மோகினி மேனனும், தனது கணவரை பிரிந்தார். எனவே இருவரையும் சேர்த்து வைத்து பேச்சுக்கள் அடிப்பட்டன. இதற்கு சாய்ரா பானுவின் வழக்கறிஞர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த பிரிவுக்கும் மோகினி மேனனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுப்படுத்தினார். இதனையடுத்து இவரும் பிரிந்தனர்.

விஜய் விஷயத்தில் சொதப்பல்

ஆனால் விஜய் விஷயத்தில் இப்படி நடக்கவில்லை. விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று, மனைவி சங்கீதா வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருக்கிறார். இது விஜய்க்கு ஏற்பட்ட அவப்பெயராக மாறியிருக்கிறது. விஜய் அரசியலில் தீவிரம் காட்டி வரும் இந்த நேரத்தில் இந்த குற்றச்சாட்டு எழுந்திருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில், விஜய் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியாளனாக இருப்பது, பொது வாழ்க்கைக்கு ரொம்பவும் முக்கியம். காரணம், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமாக இல்லாதவர்கள் பொது வாழ்க்கையில் எப்படி சிந்த தலைவனாக இருக்க முடியும்? என்கிற கேள்விதான் விஜய்யை நோக்கி இப்போது எழுந்திருக்கிறது.

விவாகரத்துக்காக சங்கீதா சொன்ன காரணங்கள் ரொம்பவும் கவனிக்கப்பட வேண்டியவை. விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அதை கேள்வி எழுப்பிய பின்னரும் கூட, அவர் அந்த விஷயத்தை தொடர்வதாகவும், வெளிநாடுகளுக்கு அந்த நடிகையுடன் தொடர்ந்து பயணிப்பதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை தேவையெனில் வெளியிட தயார் என்றும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+