ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்! ஏக குழப்பத்தில் விஜய்! நிர்வாகிகளை வைத்தே நிர்வாக குழு எதற்காக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மரணத்திற்கு பிறகு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியை நிர்வாகம் செய்ய பொதுச்செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களை வைத்து மீண்டும் ஒரு நிர்வாக குழுவை ஏன் உருவாக்கினார் என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மேலும் கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயின் பல செயல்களில் தடுமாற்றம் தெரிவதாகவும் கூறுகின்றனர்.

கடந்தாண்டு கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் முழுமையான அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமனம் மட்டுமே நடைபெற்றிருக்கும் நிலையில் மாநகர், நகர், ஒன்றியம், கிளைக் கழக நிர்வாகிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 60 ஆயிரம் பேர் கொண்ட பூத் கமிட்டி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினாலும், மாவட்ட செயலாளர்கள் விஜயை ஏமாற்றி இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

Vijay Karur TVK

விஜய் அரசியல்

அதற்கு காரணமும் உண்டு. ஏற்கனவே சொன்னது போல மாநகர், நகர், ஒன்றிய, கிளை அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாததால் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு விஜயின் செயல்பாடுகளில் பெருத்த குழப்பம் நிலவுகிறது. தூத்துக்குடி மரணம், அனிதா தற்கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்றார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம்

ஆனால், கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. டிஜிபி இடம் அனுமதி கோரப்பட்ட நிலையில் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகுமாறு அறிவுறுத்தினர். ஆனால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுவரை அனுமதி கேட்டு மனு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் எனக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பங்களை மகாபலிபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார் விஜய். இது பலத்த விமர்சனங்களை பெற்றது.

கட்சி குழப்பம்

இப்படியாக செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 27ஆம் தேதி வரை வீடியோ வெளியிட்டது, இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது, நிதி உதவி வழங்கியது, வீடியோ காலில் பேசியது என விஜய்யின் செயல்கள் அனைத்தும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் மக்களைச் சந்தித்த அடுத்த நாளே திமுக அரசை கண்டித்து அறிக்கை விட்டிருந்தார் விஜய். அடுத்த சில மணி நேரங்களில் கட்சிக்கு புதிய நிர்வாக குழு நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியிருந்தார்.

நிர்வாக குழு

இதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மாவட்ட செயலாளர்களும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதை வைத்துதான் விஜய் மீது விமர்சனம் எழுந்திருக்கிறது. பொதுவாக ஒரு கட்சியை நிர்வாகம் செய்வதற்காக தான் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்று இருப்பார்கள். ஆனால் அந்த நிர்வாகிகளைக் கொண்டே கட்சியை நிர்வாகிக்க நிர்வாக குழு என்பது விஜயின் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும் பிரச்சாரத்தை ஆரம்பித்த சில வாரங்களிலேயே அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய். அவரது அடுத்தகட்ட பயணம் என்ன? எப்போது பிரச்சாரம் தொடங்கும்? இதையெல்லாம் ஒருங்கிணைக்கப் போவது யார்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+