ஜனநாயகன் பட வழக்கு.. தணிக்கை வாரியம் அப்படி சொன்னதும்.. மொத்தமாக சைலண்ட் ஆன ஹைகோர்ட்!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்குவதில் இறுதி முடிவெடுக்கவில்லை என்று தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. இதையடுத்து கோர்ட்டில் நீண்ட நேரம் அமைதி நிலவியது.
ஜனநாயகன் பட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், தணிக்கை வாரியம் (CBFC) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜனநாயகன் படத்தை யார் பார்த்தது மண்டல அதிகாரி படத்தைப் பார்த்தாரா? எனத் தலைமை நீதிபதி கேட்டார்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதம் வைத்தார். அதில், ஜனநாயகன் படத்திற்கு சான்று வழங்குவதில் இறுதி முடிவெடுக்கவில்லை. ஜனநாயகன் வழக்கில் பதிலளிக்க எங்களுக்கு அவகாசம் வழங்கியிருக்க வேண்டும்.
500 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறி உடனடிாக நிவாரணம் கோர முடியாது என வாதம் வைத்தனர். இதையடுத்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் இருவரும் தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டனர். இவர்களின் ஆலோசனை காரணமாக கோர்ட் அப்படியே அமைதி ஆனது. கோர்ட்டில் நீடித்த நிசப்தம் ஏற்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் (KVN Productions) தரப்பு வாதம்
டிசம்பர் 22-ம் தேதி தணிக்கை வாரியத்திடம் இருந்து வந்த கடிதமே இறுதி முடிவாகக் கருதப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பு வாதிட்டது. ஆனால், இது தணிக்கை வாரியத்தின் நேரடி முடிவு அல்ல, ஒரு குழுவின் பரிந்துரை மட்டுமே என்பதை தணிக்கை வாரியம் தற்போது மறுத்து வருகிறது.
தணிக்கை வாரியம் வாதம்
எஸ்.எஸ்.ஜி சுந்தரேசன் முன்வைத்த வாதங்களில் ஜனவரி 5-ம் தேதி தயாரிப்பாளர் மனுத் தாக்கல் செய்தபோதே, படத்தை 'மறுஆய்வுக் குழுவுக்கு' (Revising Committee) அனுப்பத் தணிக்கை வாரியத் தலைவர் முடிவெடுத்தது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பு அந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. மாறாக படத்திற்கு சான்றிதழ் வழங்க கேட்டிருந்தனர். ஏற்கனவே நாங்கள் 'மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை அவர்கள் குறிப்பிடவில்லை.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தனி நீதிபதி முன் நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி தனி நீதிபதி தீர்ப்பளித்தார். தயாரிப்பாளர் தரப்பு 'U/A 16+' சான்றிதழ் வழங்க மட்டுமே கோரியிருந்த நிலையில், வாரியத் தலைவரின் உத்தரவைத் தனி நீதிபதி ரத்து செய்தது சரியல்ல. தயாரிப்பாளர் தரப்பு அதை கோரிக்கையாக வைக்கவில்லை.
மேலும் தணிக்கை வாரியத்தின் மண்டல அதிகாரி டிசம்பர் 22-ல் அனுப்பிய கடிதம், 'ஆய்வுக் குழுவின்' (Examining Committee) பரிந்துரை மட்டுமே. அதில் 14 காட்சிகளை நீக்கினால் 'U/A 16+' சான்றிதழ் வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இது தணிக்கை விதிகளின்படி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல, ஒரு இடைக்காலத் தகவல் மட்டுமே.
டிசம்பர் 29-ம் தேதி, டெல்லியில் உள்ள தணிக்கை வாரியத் தலைமையகம், ஜனநாயகம் படத்திற்கு எதிராகப் புகார் வந்துள்ளதால், சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்குமாறு மண்டல அதிகாரியைப் பணித்தது. இது ஜனவரி 5-ல் தயாரிப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டது.
72 நிமிடங்களுக்கு மேல் ஓடும் படங்களுக்குத் தணிக்கை வாரியத் தலைவரே இறுதி முடிவெடுக்க அதிகாரம் கொண்டவர். இந்தப் படத்தின் விஷயத்தில், வாரியத் தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று வாதம் வைத்தார்.
நீதிபதிகளின் கேள்விகள்:
டிசம்பர் 22-ம் தேதி கடிதத்தை அனுப்பியது யார்? அது தணிக்கை வாரியத்தின் முடிவா அல்லது ஒரு ஆலோசனைக் குழுவின் முடிவா? என நீதிபதிகள் வினவினர்.
ஜனநாயகன் படத்தை யார் பார்த்தது மண்டல அதிகாரி படத்தைப் பார்த்தாரா? எனத் தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு ASG "இல்லை, ஆய்வுக் குழு மட்டுமே பார்த்தது" எனப் பதிலளித்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், "அப்படியென்றால் ஆய்வுக் குழுவை முழு வாரியமாகக் கருத முடியாது; அது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே" எனக் குறிப்பிட்டனர்.
ஒருவேளை தனி நீதிபதி இந்த வழக்கை இன்னும் விரிவாக விசாரித்திருந்தால், வாரியம் நேரடியாகப் படத்தைப் பார்த்ததா அல்லது ஆய்வுக் குழு போன்ற ஒரு அதிகாரம் வழங்கப்பட்ட அமைப்பின் மூலம் பார்த்ததா என்ற சட்ட நுணுக்கம் தெளிவாகியிருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மும்பை அல்லது டெல்லியில் இருக்கும் வாரிய உறுப்பினர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் படங்களையும் பார்ப்பது சாத்தியமில்லை. அதனால்தான் ஆய்வுக் குழுக்கள் மற்றும் மறுஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர், இதை தொடர்ந்து வழக்கில் வாதம் நடைபெற்று வருகிறது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications