பரந்தூர் விமான நிலையம்.. விஜய் கால் வைத்த மறுநாளே வந்த அரசின் அறிக்கை! உற்சாகமான தவெக நண்பாஸ்!
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று சந்தித்தார். இந்த நிலையில் மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு இன்று விளக்கம் அளித்தது. இந்நிலையில், விஜய் வந்த பின்பு தான் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளதாகவும், இந்த திட்டம் கைவிடப் படும் வரை போராடுவோம் என கூறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் லயோலா மணி.
சென்னை அருகே பரந்தூரில் விவசாய நிலங்களை கையக்கப்படுத்தும் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதைக் கண்டித்து 910 நாட்களுக்கு மேலாக விமான நிலையத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பரந்தூர், ஏகானாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கும் காரணத்தினால் மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும், வளர்ச்சி ஒருபுறம் என்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்கள் என தமிழக அரசு கூறியுள்ளது. நடிகர் விஜய் பரந்தூர் சென்ற அடுத்த நாளே தமிழக அரசு இந்த விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜய் பரந்தூர் சென்ற பின்பு தான் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளதாகவும், இந்த திட்டம் கைவிடப் படும் வரை போராடுவோம் என கூறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் லயோலா மணி. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"பரந்தூர் விவசாய மக்களின் போராட்ட குரலை காது கொடுத்து கேட்காமல்,911 நாட்கள் வாய் மூடி மவுனமாக இருந்த திமுக அரசு தற்பொழுது வாய் திறந்து பேசி இருப்பதற்கு காரணம் நேற்று தலைவர் தளபதி விஜய் அவர்கள் பரந்தூர் போராட்ட களத்தில் போராடும் விவசாய மக்களிடம் 10 நிமிடம் பேசிய உரை வீச்சுதான் காரணம்.
தலைவர் தளபதி அவர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். தலைவர் தளபதி அவர்கள் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என்பதை பலரும் புரிந்து இருப்பார்கள். இருந்தாலும் எங்களுக்கு விளக்கம் தேவை இல்லை. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். விவசாய நிலம் அழிவதை நாங்கள் விட மாட்டோம். விமான நிலையம் கட்டும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராடிக் கொண்டுதான் இருப்போம். சட்ட ரீதியாக போராடுவதற்கும் தயாராக இருக்கிறோம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
வேறு எங்கேயாவது விளை நிலம் இல்லாத இடத்தில் விமான நிலையம் கட்டிக் கொள்ளுங்கள். பரந்தூரில் கட்ட விட மாட்டோம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறோம். வாய் திறந்து பேசியமைக்கு நன்றி. பரந்தூர் மக்களின் போராட்டதை உலக செய்தியாக மாற்றிய தலைவர் தளபதி அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் விளக்கத்தை காது கொடுத்து கேட்க விரும்பவில்லை.
திட்டத்தை முழுமையாக ரத்து செய்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை காது கொடுத்து கேட்க காத்திருக்கிறோம்.
பரந்தூர் விவசாய மக்கள் தொடர்ந்து போராடுங்கள். நாங்கள் என்றும் துணை நிற்கிறோம். உங்களை நாங்கள் திமுகவை போன்று கைவிட மாட்டோம். அழிக்காதே! அழிக்காதே! விளை நிலத்தை அழிக்காதே!
கைவிடு! கைவிடு பரந்தூரில் விமான நிலையம் கட்ட நினைக்கும் முயற்சியை கைவிடு! நீங்கள் கைவிட வில்லை என்றால் மீண்டும் பரந்தூர் களத்திற்கு உறுதியாக வருவார். எந்த இடத்தில் மக்களை சந்திக்க கூடாது என்று சொன்னீர்களோ அந்த அம்பேத்கர் திடலில் வந்து சந்திப்பார்.களத்தில் சந்திப்போம்" என பதிவிட்டுள்ளார்.
-
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!












Click it and Unblock the Notifications