Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விக்கிரவாண்டி மாநாடு: தவெக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் "சர்ப்ரைஸ் கிப்ட்" விஜயின் அதிரடி முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 23 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். இந்த பரிசை யாருக்கெல்லாம் கொடுப்பார்? எதற்காக கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

நடிகர் விஜய் நேரடி அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் சமீபத்தில் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து கட்சி பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி கட்சியின் கொடி வரை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

vijay vikravandi tvk

அதே நேரத்தில் விஜய்க்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது அரசியல் பயணத்தில் உறுதியாக சென்று இருக்கிறார். கட்சிக் கொடி, கொடி பாடல் அறிமுகம் செய்த நிலையில், கொடியை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. விஜய் கட்சியின் கொடி ஸ்பெயின் நாட்டு கொடியை போல இருப்பதாகவும், விமர்சனம் இருந்தது.

இதற்கெல்லாம் மேலாக தங்கள் கட்சிக் கொடியை பயன்படுத்தியதாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினரும் தங்கள் சின்னத்தை பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சியினரும் புகார் கூறினர். இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் விஜய் ஆயத்தமாகி வருகிறாராம்.. இது ஒருபக்கம் இருக்க வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த இருக்கிறார்.

விக்கிரவாண்டியில் இந்தக் கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். செப்டம்பர் 5 ஆம் தேதி கோட் படம் வெளியாக உள்ள நிலையில், அதன் பிறகு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடையும் என்று சொல்லப்படுகிறது. மாநாட்டிற்கு திருச்சி, மதுரை என பல்வேறு இடங்களிலும் இடம் பார்த்த நிலையில், அங்கு இடம் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்கும் எனவும் அதற்கு காவல்துறை உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என விழுப்புரம் ஏடிஎஸ்பி இடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்காக மாநாடு நடப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தும் விதமாக விஜய், முடிவு ஒன்றை எடுத்துள்ளராம்.

இதன்படி, அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு விஜய், விக்கிரவாண்டி மாநாட்டில் பரிசளிக்க உள்ளதாக தவெக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன . தனது கையினால் பரிசளித்து ஊக்கப்படுத்தினால் உறுப்பினர் சேர்க்கையில் கட்சி நிர்வாகிகள், மும்முரமாக ஈடுபடுவார்கள் என விஜய் நம்புகிறாராம். இதனால்தான் இத்தகைய முடிவை விஜய் எடுத்து இருப்பதாக கட்சியினர் தரப்பில் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+