Vijay: ரசிகர்களுக்கு விஜய் செய்த அநியாயங்கள் என்ன தெரியுமா? லிஸ்ட் போட்ட மாஜி மேலாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைமைக்கு நன்றி தெரிவித்த அவர், வாய்ப்பு கிடைத்தால் விஜய்யை எதிர்த்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும் அவர் ரசிகர்களுக்கு செய்த அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவேன் என செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

Vijay Ex Manager

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்த திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சுப்புரத்தினத்துக்கு, திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராக பணியாற்றிய கன்னியாகுமரியை சேர்ந்த பி.டி.செல்வகுமாருக்கு, திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து, வேறு சில நிர்வாகிகளுக்கும் முக்கியப் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவகாசி முன்னாள் எம்எல்ஏவான பாலகங்காதரனுக்கும் திமுக வர்த்தகர் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர் அணி துணை செயலாளராக சுரேஷ் குமார், சுற்றுச்சூழல் அணி துணை செயலாளராக சங்கர் தருமன், சட்டத்துறை துணை செயலாளராக ஜெயக்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளராக சிவக்குமார், சிறுபான்மையினர் நலவுரிமை பிரிவு மாநில துணை செயலாளராக ஷேக் இஸ்மாயில் உள்ளிட்டவர்களுக்கு திமுகவில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஏற்கனவே பணியில் உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய புதிதாகப் பொறுப்பேற்ற மேலாளர் செல்வக்குமார், நடிகர் விஜய் மற்றும் அரசியல்வாதி செங்கோட்டையன் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவைப் பொறுத்தவரை, விஜய்யை ஒரு அரசியற் சக்தியாகவே கருதவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கரூர் நிகழ்வின்போது விஜய் மீது பல வழக்குகள் பதிவு செய்து கைது செய்திருக்க முடியும், ஆனால் அப்படிச் செய்யவில்லை என்றார் செல்வக்குமார். கட்சியின் தலைமை முடிவெடுத்தால் கன்னியாகுமரியில் போட்டியிட தான் தயார் என்றும், விஜய் யாரை எந்தத் தொகுதியில் நிறுத்தினாலும் அவர்களை எதிர்த்துப் போட்டியிட தான் சித்தமாக இருப்பதாகவும் அவர் சவால் விடுத்தார்.

விஜய் தனது ரசிகர்களுக்கு செய்த அநியாயங்களையும் துரோகங்களையும் தோலுரிப்பதாக செல்வக்குமார் சூளுரைத்தார். நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்று, பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்களின் வாழ்வாதாரத்திற்கு விஜய் எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார். கரூரில் ரசிகர்கள் இறந்தபோதும், 'உயிர் பிழைத்தால் போதும்' என விஜய் ஓடிவிட்டதாகவும், அன்று பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும் எனவும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

செங்கோட்டையன் போன்றவர்கள் ஐம்பது ஆண்டுகளாக 'உண்டு கொழுத்த' போலி அரசியல்வாதிகள் என்று செல்வக்குமார் கடுமையாகச் சாடினார். அவருக்கு ஓய்வெடுக்க ஒரு இடம் தேவைப்படுவதாகவும், இம்முறை அவர் நிச்சயம் டெபாசிட் இழப்பார் என்றும் கூறினார். எம்ஜிஆர் போன்ற மாபெரும் தலைவர் வளர்த்த கட்சிக்கு செங்கோட்டையன் துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விஜய் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்பதை செல்வக்குமார் உறுதிபடத் தெரிவித்தார். தன் பெற்ற தந்தையாக இருந்தாலும் கூண்டில் ஏற்றி விடுவார் என்றும், 'அவர் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார் என்று கனவில் கூட நினைக்காதீர்கள்' என்றும் அவர் எச்சரித்தார். ஒரு படம் தோற்றால், சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் கூட விட மாட்டார் என்றும் குறிப்பிட்ட செல்வக்குமார், விஜயின் ரசிகர்கள் மற்றும் விருப்பமனு அளிப்போர் தங்களது பணத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அதிமுக- பாஜக கூட்டணி இணைப்பு குறித்து இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு விருப்பமில்லாத காரணத்தால் பலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள் என குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+