"தேரை இழுத்து தெருவில் விட்றாதீங்க"! விஜய்யால் சைலன்ட்டான ஆதவ்? பிரஸ் மீட் ரத்துக்கு பின்னணி என்ன?
சென்னை: ரஜினிகாந்தின் கண்டன அறிக்கைக்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பிரஸ் மீட் வைத்து விளக்கம் கொடுப்பதாக இருந்த நிலையில் அதை விஜய்தான் தடுத்து நிறுத்தினார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.
"திமுகவுக்கு பயந்துதான் ரஜினி கட்சி தொடங்காமல் விட்டுவிட்டார். கட்சி தொடங்கும் மனவலிமை விஜய்க்கு மட்டும்தான் இருக்கிறது" என தவெக ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகி ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பலரையும் கோபத்துக்குள்ளாகியது.

ரஜினியிடம் இருந்து ஆதவ்வுக்கு எதிராக கண்டனம் வர வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களின் வாயிலாக கோரிக்கை வைத்தனர். அதே போல் ரஜினிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி முதல் பத்திரிகையாளர்கள் வரை கொந்தளித்து பதிவு போட்டிருந்தனர்.
ரஜினி பொதுவாக மரியாதை தெரிந்தவர். தனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என விரும்பினார். எனவே ரசிகர்களின் கோபத்தையும் கொந்தளிப்பையும் தணிக்கும் வகையில் நேற்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் ஆதவ் அர்ஜுனா அண்மையில் என்னை பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், தனஞ்செயன், திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால், ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். இவ்வாறு ரஜினி தெரிவித்திருந்தார்.
ரஜினி ஆவேசமாக போட்ட ட்வீட்டிற்கு மாலை விளக்கம் அளிக்கிறேன் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். அதாவது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த அவர் முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த சந்திப்பு திடீரென ரத்தாகிவிட்டது. தவெக பொதுக் கூட்டத்தில் ரஜினி மீது தனக்கு மரியாதை உண்டு, அது உண்டு இது உண்டு என சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். ரஜினிக்கு எதிரான கருத்தை மட்டும் பகிரங்கமாக சொல்லிவிட்டு மன்னிப்பை மட்டும் தவெக பொதுக் கூட்டத்தில் கேட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதவ் சொன்ன அந்த பிரஸ்மீட் ஏன் ரத்தானது என்பது குறித்து தவெக நிர்வாகிகளிடம் பேசினோம். அப்போது அவர்கள் சொன்னது, "ஏற்கெனவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஆகாது. ஒருமுறை ரஜினி காக்கா கழுகு கதை சொன்னதிலிருந்து, விஜய்யை ரஜினி ரசிகர்கள் காக்கா என அழைத்து வருகிறார்கள்.
இதனால் ரஜினி குறித்து ஆதவ் பேசியதை முதலில் விஜய் ரசித்தார். ஆனால் அரசியல் கட்சியினரும் கொந்தளிப்பார்கள் என விஜய் எதிர்பார்க்கவில்லை. இது அரசியலில், தேர்தல் நேரத்தில் பிரதிபலித்துவிடுமோ என்ற எண்ணத்தில் விஜய் இருந்தார்.
இந்த நிலையில் திடீரென ஆதவ் அர்ஜுனா பிரஸ் மீட் வைப்பது குறித்து அறிந்த விஜய், அவரை நீலாங்கரை வீட்டிற்கு அழைத்து, "விளக்கம் கொடுக்கிறேன் என பேரில் எதையாவது பேசி பிரச்சினையை பெரிதாக்கி, தேரை இழுத்து தெருவில் விட்டு விடாதீர்கள். பிரஸ் மீட் எல்லாம் வேண்டாம்" என விஜய் உத்தரவின் பேரில் ஆதவ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை. அதே நேரத்தில் ரஜினி அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக தவெக பொதுக் கூட்டத்தில் மேலோட்டமாக எதையோ பேசி, மன்னிப்பு கேட்டுவிட்டார். இவ்வாறு தவெக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
-
வில்லிவாக்கத்தில் பக்கா பிளான்.. 6 மாசத்துக்கு முன்னாடியே ஸ்கெட்ச் போட்ட ஆதவ் அர்ஜுனா! -
விஜய் தரப்பில் இருந்து திட்டமிட்டு 'ஜனநாயகன்' காட்சிகள் லீக் செய்யப்பட்டதா? ஆதவ் அர்ஜுனா ஆவேசம்! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications