ண்ணோவ் நீ இப்போ சிஎம்ணா.. பதவியேற்பு விழா மேடையில் விஜய் செய்த செயல்! நெகிழ்ந்த நண்பா.. நண்பீஸ்!
சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பதவி ஏற்றிருக்கிறார். பதவியேற்பு விழாவின்போது விஜய் செய்த செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலமைச்சராக பதவி ஏற்றாலும் விஜய் இன்னும் எளிய மனிதராகவே இருக்கிறார் என கொண்டாடி வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சி ஜோசப் விஜய் எனும் நான் எனக் கூறி தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார் விஜய்.
தொடர்ந்து அவருடன் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற போது விஜய் செய்த செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பதவியேற்பு விழாவில் முடிவடைந்ததும் விஜய் பதவி ஏற்ற அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டது. அப்போது விஜய் முன்பாக வைக்கப்பட்டிருந்த மேசையை அங்கிருந்தவர்கள் அகற்ற முயன்றனர்.
Annovv…Ena na panra 😂 pic.twitter.com/Ve0S8Ut4G2
— Maddy Madhav (@MaddyMadhav_) May 10, 2026
அவர்களுடன் சேர்ந்து விஜய்யும் அந்த மேசையை தூக்கி வைத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஆகவே இருந்தாலும் ஒரு எளிய மனிதர் போல விஜய், சாதாரண ஊழியர்களுடன் அந்த மேசையை தூக்கி வைத்தது பாராட்டுக்குரியது என கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.














Click it and Unblock the Notifications