ஜீவனாம்சம்+பராமரிப்பு செலவு ரெண்டும் வேணும்! விஜய்க்கு எதிரான மனுவில் சங்கீதா சொன்னதை கவனிச்சிங்களா!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என, அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு ஜீவனாம்ச செலவு மற்றும் பராமரிப்பு செலவு இரண்டையும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மனுவில் விவாகரத்துக்கான காரணங்களை சங்கீதா அடுக்கியிருக்கிறார். குறிப்பாக நடிகையுடன் விஜய், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மனுவில் சொல்லியிருப்பது என்ன?
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில், சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 2021ம் ஆண்டு விஜய், ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை நான் கண்டுபிடித்தேன். இது எனது திருமணத்தின் நம்பிக்கையை உடைத்தது. விஷயம் என்னவெனில், அந்த உறவை விஜய் முறித்துக்கொள்வதாக என்னிடம் உறுதியளித்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, எந்தவித வருத்தமும் இன்றி, அந்த உறவை விஜய் தொடர்ந்தார்.
கொடுமைபடுத்திய விஜய்
அந்த நடிகை, விஜய்யுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்வதும், அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காததும், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதைவிட முக்கியமான விஷயம் விஜய் என்னை நடத்திய விதம்தான். விஜய் என்னை கடுமையாக நடத்தினார். சண்டைக்கான காரணம் குறித்து பேசியபோது, அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தார். ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னை தனிமைப்படுத்தி வாழ வைத்தார்.
செலவுகளை ஏற்க வேண்டும்
எனவே எனக்கு விவாகரத்து வேண்டும். மட்டுமல்லாது விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை அல்லது விஜய் தனக்கு ஈடான மாற்று வசதியை செய்து தரும் வரை நீலாங்கரையில் உள்ள தற்போதைய வீட்டிலேயே வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். இந்த விவாகரத்து வழக்குக்கான அனைத்து செலவுகளையும் விஜய்யே ஏற்க வேண்டும்.
ரகசிய விசாரணை
தேவைப்பட்டால் இந்த வழக்கில் இரண்டாம் எதிர்மனுதாரராக சம்பந்தப்பட்ட நடிகையை இணைக்க தனக்கு உரிமை வேண்டும். எங்களது குடும்ப கவுரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்க்காலம் கருதி, இந்த வழக்கு விசாரணையை ரகசியமாக, அதாவது கேமரா முன்பு நடத்த வேண்டும். இது குறித்து சோஷியல் மீடியாக்களிலோ, யூடியூப் தளத்திலோ விவாதிக்க அனுமதி மறுக்க வேண்டும்.
விவாகரத்து ஏன்?
2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி வரை, இந்த விஷயம் குறித்து விஜய்யுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளாததாலும், சமரசத்திற்கு உடன்படாததாலும் இறுதியாக இந்த விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications