Vijay: கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால்.. பொருளாதார ரீதியாக விஜய் போட்ட கட்டுப்பாடு.. சங்கீதா பகீர்!
சென்னை: நடிகை உடனான கள்ள தொடர்பை தட்டிக் கேட்டதால் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டதாக அவரின் மனைவி சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். என்னை சுதந்திரமாக நடமாடவிடாமல் விஜய் தடுத்ததாக குற்றம்சாட்டியுள்ள விஜய், பொருளாதார ரீதியாகவும் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறியுள்ளார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி அவரின் மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 20ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் விஜய் மீது பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அதில், நடிகை உடனான திருமணத்தை மீறிய உறவில் இருந்தது 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு தெரிய வந்தது. நான் கண்டுபிடித்த பிறகும் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் தொடர்ந்து வந்தார். இதையடுத்து நடிகை உடனான திருமணத்தை மீறிய உறவை முறித்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னதை போல் விஜய் நடக்காமல், களளத்தொடரை தொடர்ந்தார்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதோடு, விஜய்யால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் கள்ளத்தொடரை விஜய் தொடர்ந்தார். விஜய்யின் திருமணத்தை மீறிய உறவால் 2021ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியாக வாசித்து வருகிறோம்.
எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனால் குழந்தைகளும் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், எனக்கான உரிமைகளை கணவர் விஜய் நிறுத்திவிட்டார். சுதந்திரமாக நடமாடவிடாமல் தடுத்தார். பொருளாதார ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications