காங்கிரசில் இருந்து விஜயதாரணி இதனால் தான் விலகியிருப்பார்.. சீமான் சொல்லும் காரணத்தை பாருங்க
சென்னை: இனிமேல் காங்கிரஸ் கட்சியே இருக்காது. இதனால் காங்கிரசில் இருந்து எந்த பயனும் இல்லை என்று நினைத்து பாஜகவிற்கு விஜயதாரணி சென்றிருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது மதித்து 3 முறை வாய்ப்பு கொடுத்தது, ஆனால் பாஜக இதை செய்யுமா என தெரியாது என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த கையோடு தனது எம்.எல்.ஏ பொறுப்பையும் ராஜினமா செய்துள்ளார். கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் போட்டியிட விஜயதாரணி வாய்ப்பு கேட்டதாகவும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, பாஜகவில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது.

பாஜகவில் இணைந்த விஜயதாரணியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விஜயதாரணி பாஜகவில் இணைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், இனி காங்கிர்ஸ் கட்சியே இருக்காது என நினைத்து அவர் பாஜகவுக்கு போயிருக்கலாம் எனப் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:-
பாஜக வாய்ப்பு கொடுக்காது: போகனும் என்று தோன்றியிருக்கு போயிருக்காங்க.. இனிமேல் காங்கிரசே இருக்காது. இதனால் காங்கிரசில் இருந்து எந்த பயனும் இல்லை என்று நினைத்து பாஜகவிற்கு சென்றிருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது மதித்து 3 முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் பாஜக மாதிரி கட்சியெல்லாம் சேரும் போது செய்தி.. அவ்வளவு தான் அதுக்கு பிறகு இறந்தால் கூட செய்தி வருமா என்று தெரியாது.. காங்கிரஸ் கட்சி கூட 3 முறை தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தது.
வாக்கு எந்திரத்தை வைத்து எதுவும் மாற்றம் செய்ய முடியாது. மக்கள் கையில் எதுவும் இருக்காது. ஒரு பட்டனை அழுத்தினால் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அந்த விளக்கு எரியும். இப்போது 400 இடம் என்று சொல்கிறார்கள். 405 கூட பெறுவார்கள். அதற்கு குறையாது. அவர்களிடம் ஒரு கையில் நோட்டு பெட்டி.. மற்றொரு கையில் ஓட்டு பெட்டி இருக்கிறது. எல்லாரும் அவர்கள் முன்னாடி போட்டு இருக்கோம் முட்டி. வேறு என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது.
ஈவிஎம் எந்திரம்: இந்தியா, நைஜீரியா, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் மட்டும் தான் வாக்கு எந்திரம் வைத்து தேர்தல் நடத்துகிறார்கள். அமெரிக்கா, ரஷியா, ஈவிஎம் எந்திரம் தயாரித்து அனுப்பும் ஜப்பான் கூட வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தலை நடத்துகிறார்கள்.. நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களிடம் எத்தனை சோதனைகள் செய்கிறீர்கள்.
சந்திர மண்டலத்திற்கு சந்திராயன் அனுப்பியது இங்கு இருந்து தானே. இங்கே இருந்து கொண்டே சந்திராயனை கட்டுப்படுத்தி இயக்க முடிகிறது என்றால், நான் சீமான் அம்மாக்கிட்ட பேசுகிறதை டெல்லியில் உங்களால் ஒட்டு கேட்கிற முடிகிறது என்றால்.. இந்த வாக்கு எந்திரத்தை உங்களால் ஹேக் செய்ய முடியாதா என்ன? இவ்வாறு சீமான் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications