Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயதாரணியா இது.. மேடையில் நின்று இப்படியா பேசுவது.. அவர் யார் தெரியுமா.. எகிறும் வேலூர் இப்ராஹிம்

விஜயதாரணிக்கு பாஜகவின் வேலூர் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயங்கரவாதியாக பார்க்கப்படும் ஜாகிர் நாயக்கை ஆதரித்து பேசும் விஜயதாரணியையும் இந்த சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜகவின் வேலூர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக் ஞானி என்றும், அப்படிப்பட்டவரை வேண்டாம் என்று சொல்லும் இந்த அரசு வேண்டாம் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பேசியிருந்த நிலையில், அவருக்கு பாஜக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இஸ்லாமிய மத பிரசாரகராக அறியப்படுபவர் ஜாகிர் நாயக்... இவரது பிரச்சாரத்தை கேட்டு, பயங்கரவாதியாக ஒருவர் மாறி பங்களாதேஷில் பயங்கரவாத செயலை அரங்கேற்றியதாக கூறப்பட்ட நிலையில், இவர் மேலும் ஃபேமஸ் ஆனார்

சேனல்கள்

சேனல்கள்

இதையடுத்து, இஸ்லாமிய நாடான பங்களாதேஷில் ஜாகீர் நாயக்கின் பிரச்சாரங்களுக்கும், அவரது நிகழ்ச்சிகளுக்கும், அவரது சேனல்களுக்கும் அந்த நாடு தடை விதித்திருக்கிறது... அதேபோல, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளும், ஜாகிர் நாயக்கை தங்களது நாட்டுக்குள் வரக்கூடாது என்றும் தடை விதித்துள்ளன. மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்... அவர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டார்.

 விஜயதாரணி

விஜயதாரணி

அவரை நாடு கடத்தும்படி இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும் மலேசியா மறுத்து வருவதுடன், அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கி பாதுகாத்தும் வருகிறது... இந்த நிலையில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜாகிர் நாயக் ஒரு ஞானி என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ விஜயதரணி சமீபத்தில் பேசியிருந்தார். ஜாகிர் நாயக்கை வேண்டாம் என்று சொன்ன இந்த அரசு வேண்டாம் என்றும் விஜயதாரணி பேசியிருந்ததாக கூறப்படுகிறது. எஸ்டிபிஐ கட்சியின் கூட்டம் நெல்லையில் நடந்தபோது, இதில் பங்கேற்று விஜயதரணி பேசியதாவது:

 ஞானி ஒப்பீடு

ஞானி ஒப்பீடு

"ஜாகிர் நாயக் பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும், மேலதிக தகவல்களை நிஜாமுதீனிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்... ஜாகிர் நாயக் பற்றி கேட்கும்போது நான் என்னையே பார்ப்பது போல இருக்கிறது... ஏனென்றால், அவர் இந்து மதம், கிறிஸ்தவ மதம் ஆகியவற்றுடன் இஸ்லாம் மதத்தை ஒப்பிட்டு, அவற்றிலுள்ள நல்ல விஷயங்களை எல்லாம் எடுத்து சொல்லி வரும் ஒரு ஞானி... அப்படிப்பட்ட ஒரு ஞானியை, இந்த நாட்டுக்கு வேண்டாம் என்று சொல்லக் கூடிய ஒரு அரசாங்கம் இருக்குமேயானால், அப்படிப்பட்ட அரசாங்கமே நமக்கு வேண்டாம் என்று கூறியிருந்தார்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், விஜயதாரணி பேசியதாக அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பாஜகவும் எதிர்வினையாற்றி வருகிறது.. அந்தவகையில், பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.. "முஸ்லிம் மக்களை திசை திருப்பக் கூடிய கருத்தை விஜயதாரணி கூறியுள்ளார். முதலில், ஜாகிர் நாயக் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய கல்வியை கற்றதாக கூறும் ஜாகிர் நாயக், முஸ்லிம் மக்களிடம் மத பிரசாரம் மேற்கொண்டார்.

 பணபரிமாற்றம்

பணபரிமாற்றம்

அவரது பேச்சில் முழுக்க முழுக்க இனவாதமும், மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும்கருத்துகளும்தான் வெளிப்பட்டன... தேசப் பற்றும், தேச ஒற்றுமையும் ஒவ்வொரு இஸ்லாமியனின் நெஞ்சிலும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், தேசத்துக்கு எதிராக, அவர்களை திசை திருப்பக் கூடிய வேலையை தான் ஜாகிர் நாயக் செய்தார். அதுமட்டுமல்ல, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தவர். வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து தவறான வழியில் பணம் பெற்று, அதை வைத்து பல்வேறு மத மக்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் அளவில், துவேஷ பிரசாரத்தை துணிந்து செய்தவர்...

 ஜாகிர் நாயக்

ஜாகிர் நாயக்

இந்த நடவடிக்கையை அறிந்த மத்திய அரசு, தன் புலனாய்வு அமைப்புகள் வாயிலாக, அவர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய முயற்சித்தது. அந்த சமயத்தில் தான், அவர் மலேஷியாவில் தஞ்சமடைந்தார்... தவறு செய்யாதவராக இருந்திருந்தால், இந்த மண்ணிலேயே இருந்து, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, நீதிமன்றம் வாயிலாக குற்றமற்றவர்என நிரூபித்திருக்க வேண்டும். கோழையாக தப்பித்து ஓடியவர் ஜாகிர் நாயக். இப்படிப்பட்ட மோசமான பின்புலம் கொண்ட ஜாகிர் நாயக்கை, ஞானி என்று புகழ்வதும், மத்திய அரசு அவரை விரட்டி அடித்ததுபோல மேடையில் ஏறி நின்று பேசுவதும், ஒரு எம்எல்ஏவுக்கு அழகல்ல...

ஞானி

ஞானி

அவரது பேச்சு முழுக்க முழுக்க ஓட்டு அரசியலை பின்புலமாக கொண்டது. அமைதியாக தேசப் பற்றுடன், தேச வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய இஸ்லாமியர்களை திசை திருப்பி, அவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்லும் அளவில், ஜாகிர் நாயக் பேச்சு இருக்கும் என்றால், அதே வேலையை தான் ஒரு எம்எல்ஏவாக விஜயதாரணியும் செய்கிறார்.... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஏன் முஸ்லிம்களாக இருந்தாலும், இந்த சமூகம் அவர்களை புறக்கணிக்க வேண்டும்..

 விஜயதாரணி

விஜயதாரணி

அந்த வகையில், பயங்கரவாதியாக பார்க்கப்படும் ஜாகிர் நாயக்கை ஆதரித்து பேசும் விஜயதாரணியையும் இந்த சமூகம் புறக்கணிக்க வேண்டும்.. சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசும் விஜயதாரணி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவரை தண்டிக்க வேண்டும். இவர்களிடம் இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் தன் எதிர்ப்பை வேலூர் இப்ராஹிம் பதிவு செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+