விஜயகாந்த் மீண்டும் சீறிப் பாயப் போகிறார்.. வாய்ஸ் வந்து விட்டது.. அக்குபங்சர் டாக்டர் கூறுகிறார்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டதாக அவரது அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் என்றாலே அவரது கம்பீர குரலும் முக பாவனைகளும், சிவந்த கண்களும்தான். அழகான மதுரை தமிழில் அவரது வசன உச்சரிப்பும்தான். அவரது படங்களில் போலீஸ் அதிகாரியாக வந்து அரசியல்வாதிகளையும் பயங்கரவாதிகளையும் பந்தாடும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கும்.
இந்த நிலையில் அவர் கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது அவர் 2006-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்ததை யாரும் மறந்துவிட முடியாது.

அதிமுகவுடன் கூட்டணி
அது போல் 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தவர் விஜயகாந்த். எனினும் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்தார். இத்தனை கம்பீரமாக இருந்த விஜயகாந்திற்கு அண்மைகாலமாக பேச முடியாத நிலை ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரம்
அவர் கட்சி தொடர்பான கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரங்களில் வாய் குளறி பேசியதை கேட்டு அவரது ரசிகர்களும், தொண்டர்களும் மட்டுமல்லாது பொதுமக்கள் மனம் வருந்தினர். இந்த நிலையில் விஜயகாந்த் குரல் வளத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அது போல் உடல் நலப் பிரச்சினைக்காக அவர் அவ்வப்போது அமெரிக்காவிலும் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

சிகிச்சை
இந்த நிலையில் அவருக்கு பழையபடி குரல் வளம் வந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியூஸ் 18 தமிழ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காண முடிகிறது. மேலும், பள்ளி, கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகள் எல்லாம் தற்போது தன்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அக்குபஞ்சர்
மீண்டும் அதே போல நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க அவர் விரும்புகிறார். விஜயகாந்திற்கு நரம்பியல் தொடர்பான நோய் இருந்துள்ளது. இதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்கா, சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் இதை சரி செய்ய முடியவில்லை. தற்போது அக்குபஞ்சர் முறையில் சரி செய்து வருகிறேன்.

விஜயகாந்த்
கடந்த 20 நாட்களாக அவருக்கு அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் 60 நாட்கள் சிகிச்சை எடுத்துவிட்டால் போதும். சரியாக இன்னும் 3 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அவருக்கு 45 சதவீதம் அளவிற்கு உடல்நிலை சார்ந்த பிரச்சினைகள் சரியாகிவிட்டது. விரைவில் சிறுத்தையாக, வேங்கையாக விஜயகாந்த் வெளியே வருவார்.

அக்குபஞ்சர் முறை
விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது. தற்போது அவர் தெளிவாகவும் தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார். விஜயகாந்திற்கு வழங்கப்பட்டு வந்த மற்ற சிகிச்சை முறைகளை குறைத்துவிட்டோம். அவருக்கு முற்றிலும் அக்குபஞ்சர் மருத்துவ முறையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர் விரைவில் குணமடைவார் என்றார் டாக்டர் சங்கர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications