நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு முழு ஆதரவு.. விஜயகாந்த் அறிவிப்பு! தொண்டர்களுக்கு அழைப்பு
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தல்களில், அதிமுகவுக்கு, தேமுதிக கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த இரு பகுதிகளுக்கும், வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தளவில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் களமிறங்குகின்றனர்.
விக்ரவாண்டி தொகுதிகள் முத்தமிழ்ச் செல்வன், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக சார்பில் களம் இறங்குகிறார்கள்.
இந்த இடைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை சமீபத்தில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக அமைச்சர்கள் மின்சாரத்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள், மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினர். (2-2) pic.twitter.com/V8S6sjB1c2
— Vijayakant (@iVijayakant) September 25, 2019
இந்த நிலையில், விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக, முழு ஆதரவு அளிக்கும். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், தேமுதிக தொண்டர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் அளித்து அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications