தமிழ்த்தாய் வாழ்த்து விஷயத்தில் சொதப்பல்! வேகமாக ஷேராகும் விஜய் வீடியோ! விஷயம் இதுதான்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் ஆண்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விஜய் இந்த பாடலை பாடவில்லை என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை விஜய் புறக்கணித்துவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு இதேபோல மாணவர்களை அவர் சந்தித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இதனை தொடர்ந்து அவர், 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் அரசியல் கட்சியையும் தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 300 இடங்கள் பிடித்திருந்த மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார். கடந்த முறையை போல அல்லாமல் இந்த முறை, இரண்டு வெவ்வேறு நாட்களாக மாணவர்களை விஜய் சந்திக்கிறார். அந்த வகையில் முதல் சந்திப்பு இன்று நடைபெற்றது.

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

காலை 10 மணியளவில் விஜய் அரங்கத்திற்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தார். அரங்கத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.
இதுவரை எல்லாம் ஓகேதான். ஆனால், தமிழ்த்தாய் விஷயத்தில்தான் விஜய் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதாவது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதில் முக்கியமானது, தமிழ்த்தாய் வாழ்த்து பொது நிகழ்ச்சிகளில் வாய்ப்பாடலாக பாடப்பட வேண்டும். இதற்காக பயிற்சி பெற்றவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். இசைத்தட்டுக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடாமல் புறக்கணித்த விஜய்.?
— தூய துறவி (@VSK_Talks) June 28, 2024
😡
சினிமா பாட்டுனா பாடிருப்பான்.💦 pic.twitter.com/YsOvbEBZYH
ஆனால், விஜய் நடத்திய நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைத்தட்டு கொண்டு இசைக்கப்பட்டிருக்கிறது. இது விதிகளை மீறும் செயல் என நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். அதேபோல, பாடல் இசைக்கப்பட்டபோது விஜய் இந்த பாடலை பாடவில்லை என்றும் சினிமா பாட்டு என்றால் பாடியிருப்பார், தமிழ்த்தாய் வாழ்த்து என்பதால் புறக்கணித்துவிட்டார் என நெட்டிசன்கள் வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த விஜய் ரசிகர்கள், இது தெரியாமல் நடந்த தவறுதான் என்றும், வேண்டுமென்றே யாரும் இதை செய்யவில்லை எனவும் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications