என்ன இது எடப்பாடிக்கு வந்த சோதனை?! அதிமுக தொண்டர்களே பேச்சை கேட்கல! ‘ஷாக்’ கொடுத்த விக்கிரவாண்டி!
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டேட்டா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. அதிமுக தொண்டர்களே அவர் பேச்சை கேட்கவில்லையா என்ற குரல்கள் எழுந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14 ஆம் தேதி துவங்கியது. 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 29 வேட்பாளர்கள் தகுதி பெற்றனர்.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தமாக 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
இன்று காலை 7 மணிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடக்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 6 மணி வரை 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2021 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 82.04 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் இன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதை விட கூடுதலாக 82.48 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததும், நாம் தமிழர் கட்சி, பாமக ஆகியவை, அதிமுகவிடம் ஆதரவு கோரின. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரsசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்களே.. நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இந்த முறை என்னை ஆதரியுங்கள்" என்று பேசினார்.
அதேபோல, விக்கிரவாண்டி பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார். மேலும், பாமகவின் தேர்தல் பிரச்சார பேனர்களில் ஜெயலலிதா படமும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், அதிமுக தரப்பு யாருக்கும் ஆதரவு இல்லை எனத் தெரிவித்தது. தேர்தல் புறக்கணிப்பு என்றால், வாக்களிக்காமல் புறக்கணிப்பதும் தான் என்றனர் அதிமுக மற்றும் தேமுதிகவினர். இதனால், அதிமுக, தேமுதிக தொண்டர்கள் யாரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக, கடந்த 2021 சட்டசபை தேர்தலை விட அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆக, இந்த முறை அதிமுக, தேமுதிக தொண்டர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்த நிலையில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.
அதிமுக வாக்குகள் யார் பக்கம் சென்றன என்பது வரும் 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும். அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா படத்தை வைத்து ஓட்டு கேட்ட பாமகவுக்கா, நேரடியாக ஆதரவு கேட்ட சீமானுக்கா, இல்லை அரசியல் நோக்கங்கள் கருதி பாஜக கூட்டணி பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காக ஆளும் திமுகவுக்கா, அல்லது நோட்டாவுக்கு வாக்களித்தார்களா என்பது தெரிந்துவிடும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்ற எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை அதிமுகவினர் எந்த அளவுக்கு புறக்கணித்து உள்ளனர் என்பதை இந்த வாக்குப் பதிவு சதவீதம் காட்டுகிறது என திமுகவினரும், ஓபிஎஸ் தரப்பினரும், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 84,157 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். திமுகவுக்கு 48.41 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 43.47 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அதிமுக, பாமக மற்றும் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications