"பொன்முடிக்கு அடுத்த சிக்கல்?" செம்மண் குவாரி முறைகேடு வழக்கு.. இன்று விசாரணை!
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூா் அடுத்துள்ள பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் அள்ளியதாகப் புகார் எழுந்தது.

இதன் மூலம் அரசுக்கு சுமார் 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதமசிகாமணி, உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு 2012இல் விழுப்புரம் குற்றப் பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடந்து வந்த போதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேர் பிறழ் சாட்சியமளித்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவர் மட்டுமே ஆஜராகினர்.
மற்றவர்கள் நேரில் ஆஜராகாத நிலையில், அதற்கான காரணத்தை திமுக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications