ஜெயலலிதாவே உயிரோடு எழுந்து வந்தாலும் கட்சியை தரமாட்டார் எடப்பாடி! மாஜி அதிமுக நிர்வாகி குமுறல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவே ஒருவேளை உயிரோடு எழுந்து வந்தாலும் இப்போது கட்சியை தரமாட்டார் எடப்பாடி பழனிசாமி என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகி முரளி குமுறியிருக்கிறார்.

''அம்மாவையே உங்களை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டோம்'' எனக் கூறுவார் எடப்பாடி பழனிசாமி என அந்த நிர்வாகி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார். விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தவர் அதிமுகவை சேர்ந்த முரளி என்ற ரகுராமன்.

 Villupuram district Executive who was removed from the AIADMK, is upset on Edappadi palanisamy

இவர் சொந்தக் கட்சியின் தலைமையை அழைத்து வந்து விழுப்புரத்தில் நிகழ்ச்சி நடத்தாமல் கூட்டணிக் கட்சியின் தலைமையான அண்ணாமலையை அழைத்து வந்து திருமண விழாவை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறதஏற்கனவே இவருக்கும் சி.வி.சண்முகத்துக்கும் எம்.எல்.ஏ. சீட் விவகாரத்தில் ஏழாம் பொருத்தம். இதனால் முரளி என்ற ரகுராமனை கட்சியிலிருந்து கட்டம் கட்ட சி.வி.சண்முகம் கிரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து நேற்றைய தினம் அதிரடியாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

தன்னை எடப்பாடி பழனிசாமி நீக்கியது பற்றி செய்தியாளர்களை அழைத்து குமுறிய ரகுராமன், மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளுமாறு யாரிடமும் போய் நிற்கமாட்டேன் என்றும் 1984லிருந்து கட்சியிலிருந்து வரும் தனக்கே இந்த நிலையா எனவும் கொதித்தார். தாம் பாஜகவில் சேர்வதும் சேராமல் இருப்பதும் இறைவன் கையில் இருப்பதாக கூறிய அவர், எல்லா மாவட்டங்களில் இருந்தும் தனக்கு அழைப்பு வருவதாகவும் எடப்பாடியின் நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.

 Villupuram district Executive who was removed from the AIADMK, is upset on Edappadi palanisamy

அண்ணாமலையை பற்றி புகழ்ந்து பேசினால் இவர்களுக்கு ஏன் பயம் வருகிறது எனத் தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி,சண்முகத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார். இதனிடையே எடப்பாடியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டமுரளி என்ற ரகுராமனை பன்னீர்செல்வம் தரப்பு தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. ஆனால் அவரோ பாஜகவில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+