இன்னொரு சான்ஸ் இருக்கு.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு- தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். இதுவரை மொத்தம் 13 லட்சம் பேர் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் இடம்பெறுபவர்கள் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற்றன. பின்னர் டிச.19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர் க்கு முன்பாக அதாவது கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், இரட்டை பதிவு என மொத்தம் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து டிசம்பர் 19 முதல் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர். எஸ்ஐஆர் பணியில் இறந்ததாக நீக்கப்பட்ட 26 லட்சம் பேரில் ஒருசிலர் மட்டுமே தாங்கள் உயிருடன் இருக்கும் நிலையில் நீக்கியதாக ஆட்சேபம் தெரிவித்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர்.
எஸ்.ஐ.ஆர்.க்குப் பிறகான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கக்கோரி நேற்று வரை (FORM 6) 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 35,646 பேர் (FORM 7) சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 35,646 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.44 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சுமார் 53 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. இதனால் 53.60 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் தான் வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நாளில் இருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்றுடன் கால அவகாசம் முடிந்திருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications