விஆர் மாலுக்கு போன பெண்.. ஆள் இல்லா இடத்தில் அத்துமீறிய ஆண் நபர்.. டிரெண்டான இளம்பெண் ட்வீட்
சென்னை அண்ணாநகர் வி ஆர் மாலுக்கு சென்ற பெண்ணிடம் ஆண் நண்பர் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் ட்விட்டரில் பேசுபொருளாக உள்ளது.
சென்னை: சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஆன ஆண் நபருடன் சென்னை அண்ணாநகர் வி ஆர் மாலுக்கு சென்ற பெண், தனக்கு நடந்த பாதிப்பை ட்விட்டரில் பதிவிட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. மாலுக்குள் சென்ற பெண் ஆள் இல்லாத இடத்தில் அத்துமீறிய ஆண் நண்பரை சமூக வலைதளத்தில் அந்த பெண் அம்பலப்படுத்தி உள்ளார். இது தான் தற்போது இந்திய அளவில் பேசு பொருளாக உள்ளது.
சமூக வலைதளங்கள் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுகிறது என்று நாம் நம்புகிறோம். ஆனால் பெண்களை பின்தொடர்ந்து அவர்களை பேசி மயக்கி தங்கள் வலையில் வீழ்த்தும் இடமாக நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள்.
சில பெண்கள் சாப்பிட என்ன பிடிக்கும் என்பது முதல் எங்கு செல்கிறார்கள், என்னனென்ன செய்கிறார்கள் என்பது வரை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அதற்கு வரும் லைக் மற்றும் கமெண்டுகளால் சந்தோஷப்படும் அவர்களை குறிவைத்து சில ஆண்கள் செயல்படத்தான் செய்கிறார்கள்.

காதல் வலை
நல்லவர் போல பழகி, நம்ப வைத்து நட்பு பாராட்டி பின்னர் காதல் வலையில் வீழ்த்துகிறார்கள். இப்படிப்பட்ட வலையில் விழும் பெண்களை அவர்கள் யூஸ் பண்ண வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவது வெளிப்படையாகவே தெரியும், முன்பின் தெரியாத நபர்களை சமூக வலைதளங்களில் காதலித்து பின்னர் சிக்கலில் சிக்கும் சம்பவங்கள் நடப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டீன் ஏஜ் பெண்கள்
18 வயது நிறைவடையாத பல டீன் ஏஜ் பெண்கள், பைக்கில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள், வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் சுற்றும் இளைஞர்கள், பணக்காரன் போல் பந்தா செய்து சுற்றும் சில இளைஞர்களின் வலையில் விழுவதற்கு சமூக வலைதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பெண் சிறார்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் போது பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஆண் நண்பர் பழக்கம்
சரி விஷயத்துக்கு வருவோம், சென்னை அண்ணாநகரில் இருக்கிறது வி ஆர் மால். இங்கு தனது ஆண் நண்பரால் பாதிக்கப்பட்ட விவகாரத்தை, சமூக வலைதள பக்கத்தில் பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். அது இந்திய அளவில் பேசுபொருளாகி உள்ளது. 23 வயதாகும் அந்த பெண்ணுக்கு சமூகவலைத்தளம் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள வி.ஆர். மாலில், அந்த நபரை, இளம் பெண் சந்திக்க சென்றுள்ளார்.

பதிவிட்ட பெண்
அப்போது, அந்த இளைஞர் திடீரென குறைந்த கண்காணிப்புகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, தவறாக நடக்க முயன்றதாக சமூக வலைதளத்தில் இந்த இளம் பெண் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூக வலைதள பக்கத்தை ஆய்வு செய்து, குற்றச்சாட்டு தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விஆர் மால் தரப்பிலோ அல்லது போலீஸ் தரப்பில் இருந்தோ விளக்கம் தந்தால் பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications