ஜெயலலிதா பற்றி பேச்சு: "வீர பெண்மணியாக பார்க்கிறோம்" நிர்மலா சீதாராமனை புகழ்ந்த அதிமுக மாஜி அமைச்சர்
சென்னை: வேலுநாச்சியருக்கு அடுத்து ஜெயலலிதாவுக்கு அடுத்து.. எங்கள் கட்சியின் சார்பில் அந்த அம்மாவுக்கு (நிர்மலா சீதாராமன்) எனது அன்பான வணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன். இப்படி ஒரு வீராங்கனையை நான் பார்த்தது இல்லை என்று நிர்மலா சீதாராமனை புகழ்ந்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். தமிழில் பேசிய நிர்மலா சீதாராமன், திமுகவை மிகக் கடுமையாக சாடினார். நிர்மலா சீதாராமன் பேசுகையில், 'மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற, இந்திய நாடே வெட்கப்படக்கூடிய மிகப்பெரிய மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

மணிப்பூர் மட்டுமின்றி, ராஜஸ்தான், டெல்லி என பெண்களுக்கு எந்த பகுதியில் துன்புறுத்தல் நடந்தாலும் அதனை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் இருக்கக் கூடாது. 25ம் தேதி மார்ச் மாதம் 1989ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த கட்சி திமுக.. ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்துட்டு, அவமானப்படுத்திவிட்டு, எல்லாரும் உட்கார்ந்து சிரித்தனர்..
இதை கண்டு ஜெயலலிதா கோபம் அடைந்து வெளியேறினார். அப்போது அவர் சபதம் எடுத்தார். நான் திரும்பி வர மாட்டேன்.. வந்தால் முதல்வராகத்தான் வருவேன் என்று சொன்னார்.. எனவே அந்த கட்சி திமுக.. இன்று திரௌபதியை குறிப்பிட்டு பேசுறாங்க.. இது என்ன அநியாயம்" என்று திமுகவையும் ஒரு பிடி பிடித்தார். இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாராட்டி பேசியுள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், "தமிழ்நாட்டு எம்.பிக்கள் உள்ளே உட்காருங்கள்.. நான் பேசுவதை கேளுங்கள்.. எய்ம்ஸில் ஆயிரகணக்கான மாணவர்கள் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். 1989- ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து அசிங்கப்படுத்திய திமுகவின் எம்.பிக்களாக வந்து இருக்கீங்க... இனிமேல் இந்த சபைக்கு நான் வரமாட்டேன்..
இனிமேல் முதல்வராகத்தான் வருவேன் என்று வீரவசனம் பேசிய ஜெயலலிதா முதல்வராக்த்தான் வந்தார். ஆனால் திரெளபதியை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று திமுகவை விமர்சித்த வீரப்பெண்மனியாக திகழ்கிறார். வேலுநாச்சியருக்கு அடுத்து ஜெயலலிதாவுக்கு அடுத்து.... எங்கள் கட்சியின் சார்பில் அந்த அம்மாவுக்கு (நிர்மலா சீதாராமன்) எனது அன்பான வணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன். இப்படி ஒரு வீராங்கனையை நான் பார்த்தது இல்ல" என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications