எந்த சூழலிலும் விட்டு கொடுக்க மாட்டோம்.. உயிர் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: காவிரி நீர் தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கானது மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கும் அவசியமானது என்றும் அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், காவிரி நீர் விவகாரம் குறித்து தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்து இருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி நதி நீர் உரிமையை காப்பதில் திமுக எப்போது உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரி டெல்டா விவசாயிகளுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்து விடப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் நாளன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன.
இதன் பயனாக 2021- 2022 ஆம் ஆண்டுகளில் 46.2 லட்சம் டன் அளவிலும் 2022- 2023 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும் போதும் பாசனத்திற்காக 2 டிஎம்சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது.
எனவே இதில் மத்திய அரசு தலையிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேசினார். இந்த நிலையில், காவிரி நீரை தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்.
அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம். ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தொடர்ந்து உறுதியாக எடுக்கும்" இவ்வாறு மு.க ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications