Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்பன் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கிமீ தொலைவில் மையம்.. உயர் தீவிர புயலாகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்பன் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Cyclone amphan: ஆம்பன் புயல் எங்கு கரையை கடக்கும்? தமிழகத்தின் நிலை என்ன?

    வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்தம் சனிக்கிழமை தீவிர காற்றழுத்தமாக மாறியது. பின்னர் அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர தொடங்கியது.

    அதன் பின்னர் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன்பிறகு ஆம்பன் தீவிரப்புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர தொடங்கியது இன்று வடக்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து வருகிறது.

    சென்னை அருகே மையம்

    சென்னை அருகே மையம்

    தற்போது தெற்கு வங்கக்கடலில் அதிதீவிர புயலாக மையம் கொண்டுள்ள ஆம்பன் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .அடுத்த சில மணி நேரங்களில் உயர் தீவிர புயலாக மாறக்கூடும் என்றும் புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது.

     சூறாவளி காற்று வீசும்

    சூறாவளி காற்று வீசும்

    வங்கக்கடலில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 145 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசி வருகிறது. நாளை 165 கிலோமீட்டர் முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் 20ம் தேதி வடக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 170 கிலோமீட்டர் முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். என்றும் வானிலை மையம் ஏற்கனவே தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.

    24 மணி நேரத்தில் மழை

    24 மணி நேரத்தில் மழை

    ஆம்பன் புயல் தமிழகம் மற்றும் ஆந்திர கடல் பகுதியை நெருங்கி வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 20ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில் ஆம்பன் புயல் காரணமாக தர்மபுரி , கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இடியுடன் மழை

    இடியுடன் மழை

    இந்த சூழலில் நேற்று மாலை தர்மபுரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதேபோல் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, கரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+