4 ஆப்ஷன்கள்.. அதில் கடைசிதான் ரொம்ப முக்கியம்.. ஸ்டாலின் முடிவால் எல்லாமே மாறும்.. அதிரும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்பு 4 விதமான ஆப்ஷன்கள் இருக்கின்றன.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்தது.

கடந்த மாதம் விசாரணை முடிந்த நிலையில் அந்த ரிப்போர்ட் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிப்போர்ட் இரண்டு நாட்களுக்கு முன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த விசாரணையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆப்ஷன்

ஆப்ஷன்

இந்த அறிக்கை மீது ஆளும் தரப்பு நேரடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு என்று பெரிதாக சட்ட ரீதியான அங்கீகாரங்கள் இல்லை. அதனால் முதல்வர் ஸ்டாலின் இதில் நேரடியாக பரிந்துரைகளை மையமாக வைத்து முடிவுகளை எடுக்க முடியாது. மாறாக போலீசார் விசாரணைக்கு உத்தரவிட முடியும். போலீசார் விசாரணை அறிக்கை அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆப்ஷன் 2

ஆப்ஷன் 2

போலீசார் விசாரணை அடிப்படையில் வழக்குகளை பதிய சொல்ல முடியும். அதில் வரும் முடிவுகளை வைத்து நடவடிக்கை எடுக்கலாம். இல்லை என்றால் இந்த அறிக்கை அடிப்படையில் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க முடியும். சிகிச்சையில் சந்தேகம் உள்ளது என்று கூறி நேரடியாக சிபிசிஐடிக்கு வழக்கை ஒப்படைக்க முடியும். அதன்பின் அவர்கள் ஆதாரங்களை திரட்டி வழக்கு பதிவு செய்யலாம். அவர்கள் விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

ஆப்ஷன் 3

ஆப்ஷன் 3

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை இப்போது கிடப்பில் போடவும் வாய்ப்புகள் உள்ளன. அரசியல் ரீதியாக பின்னர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அறிக்கையை இப்போது கிடப்பில் போடலாம். தேவையான நேரத்தில் இதில் மேற்கொண்டு வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதற்கான சான்ஸ் மிக மிக குறைவுதான் என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்ஷன் 4

ஆப்ஷன் 4

சட்ட ரீதியாக இதில் வேறு ஒரு ஆப்ஷனும் இருக்கிறது. அந்த ஆப்ஷன். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மூலம் இதில் தொடர்ந்து விசாரணை செய்வது. ஆணைய பரிந்துரைகளை ஆய்வு செய்வது. பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும். இதன் மூலம் அது ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரையாக மட்டுமல்லாமல், சுகாதாரத்துறையின் பரிந்துரையாக வலிமை பெறும். இதன் அடிப்படையில் பின்னர் வழக்கு பதிவு செய்து போலீசோ, சிபிசிஐடியோ விசாரிக்கலாம்.

சான்ஸ் அதிகம்

சான்ஸ் அதிகம்

தற்போது ஏற்கனவே இதை சுகாதாரத்துறை செயலாளர் விசாரிக்க தொடங்கிவிட்டதால் அதற்கே அதிக சான்ஸ் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் இந்த ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இதில் ஸ்டாலின் எடுக்க போகும் முடிவை பொறுத்தே விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்லும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+