Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த ஸ்டாலின்.. ஆப் ஆன "சீனியர்".. ஆச்சரியப்பட்டு போன அறிவாலயம்..!

ராஜகண்ணப்பன் இலாகா விவகாரத்தில் முதல்வர் எடுத்த அதிரடிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின், ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடித்த மேஜிக் குறித்துதான் தமிழக அரசியலில் ஒரே பேச்சாக இருக்கிறது..!

ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றம் பின்னணியில், அதற்கு சாதிய சர்ச்சை காரணமாக இருந்தாலும், முடிவு எப்போதோ எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றே கூறப்படுகிறது..

போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜகண்ணப்பன் மீது இன்னமும் இருக்கின்றன.. ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும் சரி, துறை ரீதியாகவும் சரி, தொடர் குற்றச்சாட்டுகள் நித்தமும் எழுந்து கொண்டேதான் இருந்தது.

அதிமுக

அதிமுக

இதில் உச்சக்கட்டமாக, பாரத் பந்த் அன்று திமுகவின் தொமுச தொழிற்சங்கம் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதும், சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூபாய் 35 லட்சம் வரை பறிமுதல் செய்ததும் ராஜகண்ணப்பனுக்கு உச்சக்கட்ட எதிர்ப்பை வலுவாக பெற்று தந்துவிட்டது.. இதுபோன்ற விவகாரங்களிலேயே அவர் மீது துறைவாரியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், அரசு அதிகாரியை சாதி ரீதியாக திட்டிய விவகாரத்தில் அதிரடியை திமுக அரசு காட்ட வேண்டி இருந்தது.

 ஐ பெரியசாமி

ஐ பெரியசாமி

மற்றொருபக்கம், போக்குவரத்து துறையை, கட்சியின் சீனியர் ஐ பெரியசாமிக்கு வழங்குவதாகத்தான் முதல்வர் யோசித்தாராம்.. ஆனால், கூட்டுறவு துறைக்கு ராஜ கண்ணப்பன் வந்தால் மேலும் சிக்கலாகிவிடும் என்பதால்தான், அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கரின் இலாகா மாற்றம் நடந்தது.. போக்குவரத்து துறையை சிவகங்கருக்கு முதல்வர் உடனே அறிவிக்க காரணம், சிவசங்கர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானவர்.. மிக சிறந்த எழுத்தாளர்..

 வாசகர்கள்

வாசகர்கள்

இவர் ஃபேஸ்புக் பதிவுக்கு பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் உண்டு.. எல்லாவற்றிற்கும் மேலாக உதயநிதியின் மனசை வெகு எளிதாக தொட்டவர்.. அதனாலேயே இலாகா மாற்றம் உடனே நடந்ததாக கூறப்பட்டது. எனினும், ராஜகண்ணப்பன் விவகாரம் 3 விதமான தாக்கங்களை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.. முதலாவதாக, திமுக அமைச்சரவை அமைந்தது முதல் அதிக புகார்களுக்கு ஆளானவர் ராஜகண்ணப்பன்தான்.. ஒருகட்டத்தில் எதிர்க்கட்சிகள் இதை விமர்சிக்கவும் தயாரானது.. அதனாலேயே உடனடியாக இலாகா மாற்றம் நடந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்ததாக, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சீனியர் அமைச்சர், சிவசங்கரின் அப்பா சிவசுப்ரமணியனால், அரசியலில் மேலேழுந்தவர்.. நாளடைவில் சிவசங்கரன் மாவட்டத்தில் வளர்ச்சி பெற துவங்கியதும், அந்த முக்கியத்துவத்தை கட்டுப்படுத்த அந்த சீனியர் முயன்றதாகவும், அது தொடர்பாக தலைமைக்கு சிவசங்கர் ஏற்கனவே புகார் சொன்னதாகவும் ஒரு பேச்சு உள்ளது.. அதுவும் இல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையை திறன்படவும் இத்தனை மாத காலமும் செய்து வந்து, உதயநிதியின் மனதில் இடம்பிடித்திருந்தார் சிவசங்கர். அதனாலேயே இந்த துறை ஒதுக்கப்பட்டு, அந்த சீனியருக்கும் ஒரு செக் வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

உதயநிதி

உதயநிதி

அடுத்ததாக, ராஜகண்ணப்பனை போல ஒருசில அமைச்சர்கள் மீதும் ஏகப்பட்ட புகார்கள் ஏற்கனவே அறிவாலயத்துக்கு சென்றுவிட்ட நிலையில், அது தொடர்பாகவும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.. புகாருருக்கு ஆளானவர்களும் சீனியர் அமைச்சர்கள் என்பதால், எந்தவிதமான கடுமையையும் ஸ்டாலின் உடனடியாக காட்டவில்லை.. அளவுக்கு அதிகமான பொறுமை காத்து வந்தார்..

 கப்சிப் மோடு

கப்சிப் மோடு

இந்நிலையில், கண்ணப்பன் விவகாரத்தில் முதல்வரின் அதிரடியை பார்த்து, சம்பந்தப்பட்ட புகாருக்கு ஆளான அமைச்சர்கள் கப்சிப் மோடுக்கு போய்விட்டனராம்.. இனி சர்ச்சைகளை உருவாக்கி கொள்ளாமல், மக்கள் நலனில் தீவிர அக்கறை செலுத்தவும் ஆரம்பித்துவிட்டனராம்.. ஆக, ராஜகண்ணப்பனுக்கு இலாகா மாற்றம் என்ற ஒரே கல்லில், சிவசங்கருக்கும் புரமோஷன் தந்து, அந்த சீனியரையும் ஆப் செய்து, மற்ற அமைச்சர்களுக்கும் பொறுப்புணர்வை ஏற்படுத்தி விட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+