Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிருக்கே ஆபத்தாக மாறிய ஜிம்கள்? காவு வாங்கிய பாடி பில்டிங்? அடுத்தடுத்து ஆண்கள் மரணம்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்த ஜிம் உரிமையாளரான மகாதீர் முகமது (35) தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக காவல்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்ற மகதீர் மகமுது நீண்ட நேரம் வெளியில் வராததால் உறவினர்கள் சென்று பார்த்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். மருத்துவர் பரிசோதனையில் மகதீர் மகமுது உயிரிழந்துவிட்டது உறுதியானது. 3 மணி நேரம் அவர் தினமும் பயிற்சி செய்துள்ளார். இது அவரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அடுத்தடுத்து பாடி பில்டிங் செய்யும் பலரும் ஜிம்களிலேயே மடிந்து விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

gym chennai

கடந்த 2021ம் ஆண்டு நடிகர் புனீத் ராஜ்குமார் ஜிம்மில் மரணம் அடைந்தார். வெயிட் லிப்டிங் தூக்கிக்கொண்டு இருக்கும் போதே அவர் மரணம் அடைந்தார். அவரின் கடைசி வீடியோ கூட இணையத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் அது கடைசி சம்பவம் கிடையாது.

அதற்கு முன்பும், பின்பும் இதேபோல் பல சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன. அதில் புதிதாக இணைந்ததுதான் நேற்று நடந்த சம்பவம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இதேபோல் சென்னை கொரட்டூரில் உள்ள ஜிம்மில் மயங்கி விழுந்து ஜிம் டிரெய்னர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் பெயர் ஏபின் என்று கூறப்படுகிறது. அங்கே தினமும் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார் இவர். தானும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது. பயிற்சி செய்யும் போது மயக்கம் வந்துள்ளது. இதனால் புத்துணர்ச்சியாக உணர இவர் ஜிம் குளியல் அறைக்கு சென்றுள்ளார். அங்கே குளிக்கும் போதே இவர் மயங்கி விழுந்து உள்ளார் . பல மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வராத காரணத்தால் உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் பலியாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில் அந்த ஜிம் டிரெய்னர் பலியானதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்: சமீபத்தில் பாரதி கண்ணம்மா புகழ் நடிகை ஸ்ருதி சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் காலமானார். காரணம் மாரடைப்பு என்று கூறப்பட்டது. பாடிபில்டரான அரவிந்த், 30 வயதில் பலியாகி உள்ளார். அவர் ஒரு முன்னாள் மிஸ்டர் தமிழ்நாடு ஆவார். அவரின் மரணத்திற்கு ஜிம் காரணம் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஜிம் செல்லும் ஒருவர் இளம் வயதில் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் விஷால் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இதேபோல் மாரடைப்பால் பலியானார். ஜிம்மில் புஷ் அப் செய்யும் போதே மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் காவலர் உயிரிழந்தார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், விஷால் புஷ்-அப்களைச் செய்த பிறகு கடுமையாக இருமுவதையும், தரையில் விழுந்ததையும் பார்க்க முடிந்தது, அதைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு உதவ முயற்சி செய்கிறார்கள். ஆனால் அங்கேயே அவர் துடி துடித்து பலியாவதாக காட்சிகள் பதிவாகி உள்ளன.

gym chennai

பிரபலம் மரணம்: அதற்கு முன்பு யூ டியூப் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30வது வயதில் கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். பாடிபில்டிங் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை YouTube இல் பகிர்வதில் ஜோ லிண்டர் பிரபலமானவர். இளைஞர்கள் இடையே மிகப்பெரிய சூப்பர் ஹீரோவாக, சிக்மா ஆணாக ஜோ லிண்டர் திகழ்ந்து வந்தார். பாடிபில்டிங் தொடர்பாக தினசரி செய்யும் பயிற்சிகள் மற்றும் ஆன்லைனில் அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களால் ஜோ பெரிய அளவில் கவனிக்கப்பட்டார் .

அவர் ஜோஸ்தெடிக்ஸ் பயிற்சி அமைப்பு என்று தனது சொந்த பயிற்சித் திட்டத்தை உருவாக்கி அதை இளைஞர்கள் இடையே பிரபலமாகி கொண்டு சென்றார்.அவரது காதலியான சக பாடிபில்டர் நிச்சா உடன் இணைந்து இருவரும் இன்ஸ்டாகிராமில் பாடி பில்டிங் தொடர்பாக ரீலிஸ் போட்டு வந்தார். இந்த நிலையில்தான் நேற்று மாலை அவர் நரம்பு வெடித்து பலியானார். இந்தச் செய்தியை அவரது நெருங்கிய நண்பரான நோயல் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தார்.

இணையத்தில் ஜோ பலருக்கு ரோல் மாடலாக இருந்தார். அவரது திடீர் மறைவு பாடிபில்டிங் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிச்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், அனியூரிசம் என்று நோயின் காரணமாக ஜோ காலமானார் என்று கூறி உள்ளார்.

மேலும் சில மரணங்கள்: கடந்த வருடம் ஜூன் 4 அன்று, மதுரை பழங்காநத்தத்தில் உடற்பயிற்சியை முடித்த இளைஞர் ஸ்ரீ விஷ்ணு ஜிம்மில் சுருண்டு விழுந்து பலியானார். சக ஜிம் உறுப்பினர்கள் 27 வயதான ஸ்ரீ விஷ்ணுவை எல்பி மருத்துவமனைக்கும் பின்னர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். வெறும் 27 வயதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அந்த இளைஞர் ஜிம்மில் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் கடந்த வருடம் மார்ச் மாதம் ஆவடியைச் சேர்ந்த 25 வயதான பாடிபில்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஸ்டெராய்டுகள் மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ்களை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நெமிலிச்சேரியில் வசிக்கும் சபரிமுத்து என்ற ஆகாஷ், 25, உடற்கட்டமைப்பு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தார். இதற்காக அவர் மருந்துகளை எடுத்து இருந்தார்.

இதில் அவர் கிட்னி செயல் இழந்தது. அதை தொடர்ந்து அவரின் மற்ற உறுப்புகள் செயல் இழந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியானார். அதிலும் சாவதற்கு கடந்த சில நாட்கள் முன்பு வரை மூச்சு விட முடியாமல் அவர் கடுமையாக திணறினார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களிலும் இதேபோல் ஜிம்மில் இளைஞர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.

மரணம்: முக்கியமாக கொரோனாவிற்கு பின் இப்படி பலர் ஜிம்மிலேயே பலியாகி வருகின்றனர். பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது வழக்கம் ஆகி உள்ளது. ஸ்டெராய்டு ஓவர் டோஸ் காரணமாக மரணம் ஏற்படுவதை கூட ஏற்றுக்கொள்ள முடியும் . ஆனால் இந்த சாதாரண மரணங்கள் ஜிம் பயிற்சி, கொரோனாவிற்கு பின்பான மாரடைப்பு வாய்ப்புகள் ஆகியவை மீது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி இந்தியா முழுக்க பல சம்பவங்கள் நடந்து உள்ளன. ஜிம்மிற்கு செல்லும் ஆண்கள் மட்டும் இப்படி திடீர் திடீரென மாரடைப்பு வந்து பலியாவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. டயட் காரணமா? போதிய தண்ணீர் குடிக்காததா? அதிக உடல் பயிற்சி காரணமாக ஏற்படும் வேகமாக மூச்சு இரைப்பா? அதிக எடை தூக்குவதா? புரோட்டீன் பவுடர் எடுப்பதா? நீண்ட நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதா? கொரோனாவிற்கு பின்பான நீண்ட கால பக்க விளைவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+