தோல்விக்கு காரணமாக நிர்வாகிகள் சொன்ன பதில்.. கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென ரிப்ளை கொடுத்த எடப்பாடி!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியாகத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மதுரை, தென் சென்னை, வேலூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது. அதிமுக, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நாதகவுக்கு பின்னால் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் செல்போன் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் பேசியது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. தேர்தல் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன, எந்த இடத்தில் மக்களின் ஆதரவை பெற தவறினோம் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் கேட்டு றிந்ததாகவும், சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் பற்றியும் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு கூட்டணி பலம் இல்லாததே காரணம் என அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, வேறு வலுவான கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications