சுத்தி சுத்தி என்கிட்டதான் வரணும்.. "பாயிண்ட்டை" பிடித்த ஓபிஎஸ்.. வாயை பிளந்த 4 பேர்! பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவாதம் உச்சம் அடைந்துள்ள நிலையில், முக்கியமான சட்ட விதிகளை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு செக் வைக்கும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    #AIADMK ஒற்றைத்தலைமை விவகாரம்..என்ன நடக்கிறது? #EPS #OPS

    அதிமுகவில் நேற்று முதல்நாள் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று நிர்வாகிகள் பேசி இருக்கிறார்கள்.

    20க்கும் மேற்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், எடப்பாடியை ஒற்றை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    என்ன கோரிக்கை?

    என்ன கோரிக்கை?

    இந்த நிலையில் மீட்டிங்கில் இருந்து கோபமாக வெளியேறிய ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் சமாதானம் செய்துள்ளனர். நேற்று முதல் நாளும், நேற்றும் இந்த சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதாவது நீங்கள் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுங்கள். கட்சியில் உங்களுக்கு வேறு பதவி கொடுக்கிறோம். உங்கள் மகனுக்கும் தொடர்ந்து எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருகிறோம். என்ன சரியா? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஆஃபர் கொடுத்துள்ளது.

    உண்மை என்ன?

    உண்மை என்ன?

    இந்த கூட்டம் குறித்து நேற்று பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதில் ஓ பன்னீர்செல்வம் சொன்ன பதில் வாதங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் பல தகவல்களை தெரிவித்தனர். ஓ பன்னீர்செல்வம் முக்கியமான சட்ட நுணுக்கங்களை சொல்லி இந்த ஆலோசனையில் எடப்பாடி தரப்பிற்கு செக் வைத்து இருக்கிறாராம்.

     சட்ட நுணுக்கம்

    சட்ட நுணுக்கம்

    அதன்படி... என்னங்க கடந்த வருஷம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்வு முறையில் மாற்றம் செய்ததை மறந்துட்டீங்களா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரையும் நிர்வாகிகள்தான் தேர்வு செய்ய முடியும். அதே சமயம் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால், அதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் இருக்கிறது.

    என்ன அதிகாரம்?

    என்ன அதிகாரம்?

    அப்படி இருக்கும் போது பொதுக்குழு எப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு.. பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியும். அதற்கு பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றினாலும் கடைசியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அதில் கையெழுத்து போட வேண்டும்... தெரியுமா.. நான்தான் கடைசியில் ஒருங்கிணைப்பாளராக அதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரியுமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஒரேயடியாக லாக் வைத்து இருக்கிறாராம்.

    முடியவில்லை

    முடியவில்லை

    அதாவது நீங்கள் என்னதான் பொதுச்செயலாளர் பற்றி தீர்மானம் நிறைவேற்றினாலும் சுற்றி சுற்றி கடைசியில் என்னிடம்தான் வர வேண்டும்.,. ஒருங்கிணைப்பளார், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை மாற்ற பொதுக்குழுவிற்கே அதிகாரம் இல்லை என்று ஓபிஎஸ் சொல்லி இருக்கிறாராம். நான் என்னை நீக்கவே கையெழுத்து போடுவேன் என்று நினைக்கிறீர்களா என்று பாயிண்டை பிடித்துள்ளார் ஓபிஎஸ். இதை எதிர்ப்பார்க்காத, சமாதானம் செய்ய வந்த 4 எடப்பாடி கேம்ப் புள்ளிகளும்.. என்னங்க இவர் இப்படி பேசுகிறார் என்று கடுப்பில் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.

    பதிலடி

    பதிலடி

    நேராக காரை எடப்பாடி கேம்பிற்கு விட்ட அந்த 4 பேரும்... ஓபிஎஸ் சொன்னதை புட்டு புட்டு வைத்துள்ளனர். இதை கேட்டு எடப்பாடி தரப்போ.. சட்டப்படி அவர் சொல்வது சரிதான். செயற்குழு மூலம் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தில் மாற்றம் செய்துள்ளோம். கடந்த வருடம் இந்த மாற்றம் செய்யப்பட்டது. பொதுக்குழு மூலம் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. எனவே மீண்டும் செயற்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி சட்ட விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்க முடியும் என்று எடப்பாடி தரப்பு கூறி உள்ளதாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+