Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பிய சோகம்.. கிளம்பும்போதே அப்செட்.. பொன்முடிக்கு போனை போட்ட ஸ்டாலின்.. என்னாச்சு?.. அனலில் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்முடி கைது செய்யப்படுவாரா? என்ற அதிர்ச்சி கேள்வி திமுகவுக்குள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், பொன்முடிக்கு போனை போட்டு பேசியதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

திமுக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்திருப்பது, தமிழக அரசியலையும் தாண்டி, தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. அந்தவகையில், இந்த ரெய்டு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..

 What did TN CM MK Stalin say to Ponmudi and What is happening in DMK

கார்கே கண்டனம்: எதிர்க்கட்சிகளின் முக்கியமான கூட்டம் நடைபெறவிருக்கும் நேரத்தில், அமலாக்கத்துறை நடத்தும் சோதனையை கண்டிக்கிறோம். எதிரணியினரை மிரட்டி, அவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் மோடி அரசின் ஸ்க்ரிப்ட்டாகத்தான் இதைப் பார்க்கிறோம். மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம்கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டிருக்கின்றன" என்று கொந்தளித்துள்ளார்.
அன்றைய தினம், காங்கிரசுக்கு போட்டியாக கருதப்பட்ட ஆம் ஆத்மியும் திமுகவுக்காக ஓடோடி வந்துள்ளது.. "அமலாக்கத்துறை சோதனையை வன்மையாகக் கண்டிக்கிறோம். கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்தப் பார்க்கின்றனர். அமலாக்கத்துறை அமைப்பை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை உங்களால் பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது என்று அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வழக்கமாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சிகளை பந்தாடுவது வழக்கம்.. எதிர்க்கட்சிகளில் ஊழல் செய்தவர்கள் குறித்த வழக்கை தூசிதட்டி எடுத்து, அதை முறைப்படி விசாரித்து, சட்டரீதியாக அணுகி நடவடிக்கை எடுப்பது காலம்காலமாக நடந்துவரும், அரசியல் நடைமுறையாகும்..

பாஜக தீவிரம்: ஆனால், இங்கு இப்போது எல்லாமே தலைகீழாக உள்ளது.. அதிமுகவைவிட, எதிர்க்கட்சியாகும் முனைப்பில் பாஜக களமிறங்கி உள்ளது..

ஆளும் கட்சியிலேயே, அமைச்சர்கள் மீதான ரெய்டுகள் பாய்கின்றன.. உடனடியாக அவர்கள் விசாரணை வளையத்துக்குள்ளும் கொண்டுவரப்படுகிறார்கள்.. கைதாகும் படலமும் உடனடியாக நடக்கிறது.. அன்றைய தினம் விஜயபாஸ்கர்மீதும் இப்படியான பரபரப்புகள் கிளம்பினாலும், விசாரணை வரை சென்றாலும், அது ஒரு எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நீளும் விசாரணை: திமுக தரப்பில் தற்போது அதிரடிகள் ஆரம்பமாகி உள்ளது, கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. பொன்முடி மீதான விசாரணை நேற்றே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இன்னும் முடியவில்லை.. நேற்று நடந்த விசாரணையில், பொன்முடியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது போலவே இருந்ததாம்... அளவுக்கு அதிகமான மன அழுத்தத்திலும், களைப்பிலும் பொன்முடி இருந்ததால், விடியற்காலை அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்..

மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகச் சொல்லி அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விசாரணை முழுமையாக முடிந்த பிறகே, பொன்முடி கைது செய்யப்படுவார் என்கிறார்கள்..

அதாவது புழல் சிறையில் செந்தில் பாலாஜியை அடைத்துவிட்டதுமே, பொன்முடியை அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்பிருக்கிறது என்று நேற்றே செய்திகள் பரபரத்தன. இந்த செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின், பெங்களூருக்கு கிளம்பும்போதே அப்செட்டாகிவிட்டாராம்..

பெங்களூரு: எதிர்க்கட்சி தலைவர்களிடமும் சகஜமாக பேசாமல், தளர்வாக இருந்ததாக சொல்கிறார்கள். இதுகுறித்து ஒரு முக்கிய தகவலும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. பெங்களூருவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், பொன்முடியை தொடர்புகொண்டு பேசினாராம்.. ரெய்டின் போது என்ன நடந்தது ? விசாரணையில் என்ன கேட்டார்கள்? என்பது பற்றியெல்லாம் விலாவரியாக விசாரித்திருக்கிறார்.

அத்துடன், "நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள். நமது வழக்கறிஞர்கள் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார்கள்" என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். திமுகவின் மூத்த வழக்கறிஞர்கள் , பொன்முடியிடம் விவாதித்தபடி இருக்கிறார்களாம்.

தைரியம்: இன்று காலை பொன்முடியிடம் போனில் பேசிய முதல்வர், "இந்த விவகாரத்தை துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுங்கள்.. மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும் அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் தமிழ்நாடு என்றும் உங்களோடு துணை நிற்கும்" என்றும் நம்பிக்கை தந்துள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+