இன்று ரூ.1000 உரிமை தொகை விண்ணப்பம்.. வீட்டிற்கு வந்ததும்.. உடனே இதை பண்ணுங்க.. ரொம்ப முக்கியம்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இன்று வீடு தேடி விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று வழங்கப்பட உள்ளன. இந்த விண்ணப்பங்களை வாங்கியவுடன் அதை நிரப்பி கொடுக்க வேண்டியது இல்லை. அதில் உங்களுக்கான தேதி கொடுக்கப்பட்டு இருக்கும்.
மாறாக விண்ணப்பத்தில் சில முக்கிய விஷயங்கள் கேட்கப்பட்டு இருக்கும். உதாரணமாக உங்களின் ஆதார் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும். இதனால் விண்ணப்பத்தை வாங்கியவுடன் உங்கள் ஆதார் விவரங்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் போனுடன் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை செய்து கொள்ளுங்கள்.
அதாவது ஆதார் சீட்டிங் செய்யும் போது உங்கள் போனிற்கு.. ஓடிபி வருகிறதா என்று பாருங்கள். அதுதான் மிக முக்கியம். இதில் விண்ணப்பம் கொடுக்கும் போதே அதில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வர வேண்டிய தேதி அளிக்கப்படும். அந்த நாளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும். இதற்கு கையோடு செல்போனையும் எடுத்து செல்ல வேண்டும். அதாவது உங்களின் ஆதார் இணைக்கப்பட்ட செல்போனை எடுத்து செல்ல வேண்டும் .
ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ள செல்போனுக்கு ஓடிபி வரும். அதை சொன்னால்தான் அப்ளிகேஷன் வேலைகளே நடக்கும். இதனால் உங்கள் போனை கையோடு எடுத்து செல்வது மிகவும் அவசியம் ஆகும். ஆதார் அட்டை போக குடும்ப அட்டையை எடுத்து செல்வது அவசியம் ஆகும். அதேபோல் வங்கிக் கணக்கு புத்தகம், மின்சார கட்டண ரசீது ஆகியவை கொண்டு செல்வதும் அவசியம் ஆகும்.
இதனால் விண்ணப்பம் வந்தவுடன் இந்த ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்று சரி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் தேதிக்கு முன் இந்த ஆவணங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்?:
- குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்
- ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
- 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
- குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
- திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும்
- ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications