சிக்கலாகிடுமுங்க.. பாஜக பற்றி பேச வேண்டாம்! எடப்பாடி போட்ட ஆர்டர்.. காரணம் என்ன? இதுதான் மேட்டரா?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பொது இடங்களில் பேச வேண்டாம் என்று அதிமுக தலைவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரின் இந்த உத்தரவிற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது.

அதிமுக பாஜக இடையே தற்போது உச்சம் அடைந்து உள்ளது தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திடீர் திருப்பம்: இந்த நிலையில் திடீர் திருப்பமாக கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் பேசக்கூடாது; கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பருத்திமூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே என்று சொல்லும் அளவிற்கு பாஜக பற்றி பேச வேண்டாம் என்று எடப்பாடி ஆர்டர் போட்டுள்ளார். அவரின் ஆர்டருக்கு பின் உள்ள காரணம் என்ன என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
அதில், அண்ணாமலை மீது மட்டுமே அதிமுகவினர் கோபமாக உள்ளனர். அவரை நீக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். பாஜக என்பது அதிமுகவிற்கு பிரச்சனையே இல்லை. பாஜகவினர் உடன் அதிமுகவினர் நட்பாகவே உள்ளனர்.
அப்படி இருக்கும் போது பாஜகவை அதிமுகவினர் சீண்டுவதை எடப்பாடி விரும்பவில்லை. பாஜகவுடன் எடப்பாடி நட்பாக உள்ளார். தேவையில்லாமல் டெல்லி பாஜகவை சீண்டி, வேறு விதமாக, வழக்கு ரீதியாக சிக்கல்களை எதிர்கொண்டால் பிரச்சனையாகும் என்று எடப்பாடி நினைக்கிறார்., அதன் காரணமாகவே.. இதுவரை பேசியதே போதும். இதற்கு மேல் லோக்சபா தேர்தல் வரை கூட்டணி பற்றியே பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications