குண்டு வெடித்தாலும் துளியும் நகராது.. பிரதமர் வந்த ரேஞ்ரோவர் காரில் இத்தனை வசதிகளா.. அடேங்கப்பா
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் இருந்து அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யுவி காரில் வந்தார். பிரதமர் பயன்படுத்தும் இந்த நவீன கார் குறித்துக் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கத் தமிழ்நாடு வந்துள்ளார். ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் வந்தே பாரத் தொடங்கி பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். முதலில் அவர் சென்னை விமான நிலைய முனையத்தைத் தொடங்கி வைத்தார்.
இதற்காகப் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து தனது அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யுவி காரில் வந்தார். பிரதமர் பயன்படுத்தும் இந்த நவீன கார் குறித்துக் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.
பிரதமரின் கார்: ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி, டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான லேண்ட் ரோவரின் தயாரிக்கும் ஒரு மாடல் ஆகும். இந்த மாடல் எஸ்யூவி கார், அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவியில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது காருக்கு அதிக பூஸ்டை வழங்குகிறது. இந்த வாகனம் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு கட்டமைப்பாக்கப்படுகிறது. முழு பாலிஸ்டிக் மற்றும் குண்டு வெடிப்பில் இருந்தும் இது பாதுகாப்பு தரும் என்று சான்றளிக்கப்படுகிறது. நவீன ஆயுதங்கள் IEDs வெடி குண்டுகளில் இருந்தும் பாதுகாப்பு தரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காது: ரேஞ்ச் ரோவர் சென்டினல் குண்டு துளைக்க முடியாத அதிநவீன கண்ணாடியும் உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பைச் சமரசம் செய்யாமல் பிரதமர் மோடியால் வெளியே இருப்பவர்களைப் பார்க்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும். கூடுதலாக சைரன் மற்றும் எமர்ஜென்சி லைட்டிங் இருக்கும். அவசர நேரத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்
காருக்கு வெளியே மட்டுமின்றி உள்ளேயும் இந்த ரேஞ்ச் ரோவர் சென்டினல் நவீன தொழில்நுட்பம், வசதிகளைக் கொண்டுள்ளது. உள்ளே அதிநவீன டச் ப்ரோ டியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இதில் இரண்டு 10-இன்ச் ஸ்கீரீன் உள்ளன. உள்ளே இருந்த படியே செல்லும் ரூட், காலநிலை குறித்தெல்லாம் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்
வசதிகள்: ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி அனைத்து நிலப்பரப்புகளிலும் எளிதாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எந்த சாலையிலும் எந்த வானிலையிலும் இயங்கும். இது 10.4 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டக் கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 193 கிமீ வேகத்தில் செல்லும்.
இப்படி அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் பிரதமர் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்கிறது. ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி, இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
வெளியே என்ன நடந்தாலும் உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்பை இந்த கார் உறுதி செய்கிறது. இப்படி அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் பிரதமர் பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்கிறது. ரேஞ்ச் ரோவர் சென்டினல் எஸ்யூவி, இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. பிரதமருக்குப் பாதுகாப்பை இந்த வாகனம் உறுதி செய்கிறது.
சென்னை ஏர்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தைத் திறந்து வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கே சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். இதற்காகச் சென்னை சென்ட்ரலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் சோதனைக்குப் பின்னரே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள்,












Click it and Unblock the Notifications