தடம் புரண்டதா தர்ம யுத்தம்? ஓபிஎஸ் இனி என்ன செய்ய போகிறார்?
ஓ பன்னீர்செல்வம் இனி அடுத்து என்ன செய்ய போகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன என்று பார்க்கலாம்.
சென்னை: யாரை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கினாரோ அவர்களுடனே மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதால், அவரது தர்ம யுத்தம் தடம் புரண்டுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று ஓபிஎஸ் அறிவித்திருப்பது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் ஓபிஎஸ் பயணம் இனி இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என பலவாறு அரசியல் நோக்கர்கள் பல்வேறு வகையில் ஊடகங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்க இருந்த சமயம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ஓ பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்து, அதிமுகவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. தன்னை முதல்வர் பதவியில் இருந்து விலக சசிகலா கட்டாயப்படுத்தியதாக கூறி தியானத்தில் அமர்ந்து சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தத்தை தொடங்கினார்.

டிடிவி தினகரன்
அப்போது அதிமுக கட்சியில் ஓபிஎஸ் அணி உருவாகியது. அந்த சூழலில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேர்ந்தது. சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு டிடிவி தினகரன் என்று அறிவித்துவிட்டு சென்றார்.

பக்கபலமாக வேலுமணி
ஆனால் முதலமைச்சர் ஆன பின்னர் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. டிடிவி தினகரன் ஒடுக்கப்பட்டார். அதே ஆண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தனர். இருவரும் இணைந்து சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் அதிமுகவில் இருந்து நீக்கினர். ஓபிஎஸ் துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வராகவும் இருந்தார். 4 வருடம் எந்த பிரச்சனையும் இன்றி இருவரும் ஆட்சியை நிறைவு செய்தனர். அந்த நான்கு வருடங்களில் எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. கொங்கு மண்டலத்தில் தான் அதிமுக அதிக எம்எல்ஏக்களை வென்று இருந்ததால் எடப்பாடிக்கு கட்சியில் பெரிய அளவில் செல்வாக்கு வளர்ந்து இருந்தது. எடப்பாடிக்கு பக்கபலமாக வேலுமணி, தங்கமணி ஆகியோர் இருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர்
அதேநேரம் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவு வட்டம் குறைந்து கொண்டே வந்தது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வந்தபோது, யார் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி வந்த போது, அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க விரும்பினர். அதற்கு ஓபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பேசி சமாதானம் செய்து அவரை அப்போது ஒப்புக் கொள்ள வைத்தனர். ஆனால் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவில்லை. அதேநேரம் கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றது அதிமுக. மொத்தம் 65 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக எதிர்க்கட்சியானது.

ஓபிஎஸ்க்கு தோல்வி
பெரும்பாலானோர் எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்பதால், எதிர்க்கட்சிதலைவராக எடப்பாடி பழனிசாமியே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரினார்கள். அப்போது ஓபிஎஸ் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் அவரை அப்போதும் சமாதானம் செய்து எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடியை தேர்வு செய்தனர். இதற்கு அடுத்து ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்த போதும் ஓபிஎஸ்க்கு தோல்வி முகம்தான் கிடைத்தது. எடப்பாடி ஒற்றை தலைமையாக மாற பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தந்ததால் அவரது கையே ஓங்கியது.

பின்னணி என்ன
உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இபிஎஸ்க்கு சாதகமான நிலையில், இரட்டை இலை பக்கமே தொண்டர்கள் பலம் என்றானது. போராட்டங்களில் தொடர் தோல்விகளுக்கு மத்தியில் தான் தர்மயுத்தம் 2.0 வை தொடங்குவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் அறிவித்தார். கட்சியில் எம்ஜிஆர் கொண்டு வந்த விதிகளை மீட்பதற்காக மீண்டும் தர்மயுத்தம் என தெரிவித்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ் இன் இந்த அறிவிப்பின் பின்னணி என்ன, வியூகம் என்ன என்று அரசியல் நோக்கர்கள் கூறுகையில், கட்சியில் தனக்கு உள்ள தொண்டர்கள் பலத்தை காட்டத்தான் இந்த அறிவிப்பு என்றார்கள். ஓபிஎஸ் தனது சமூக வாக்குகளை அணி திரட்ட முயற்சிக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.

தடம் புரண்டதா?
இப்படி ஒட்டுமொத்தமாக கட்சி தொண்டர்கள் மத்தியில் தனது பலத்தை காட்டும் தளமாக இரண்டாவது தர்ம யுத்தத்தை கையில் எடுத்திருப்பதாக பார்க்கப்பட்டது. இதற்கிடையே டிடிவி தினகரனையும், சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். இப்போது கட்சி இபிஎஸ் வசம் ஆகிவிட்ட நிலையில், டிடிவி தினகரனுடன் கைகோர்க்க தயார் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ். மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பும் நிலையில், அவரது தர்ம யுத்தம் தடம் புரண்டதா என்ற கேள்வியும் கிளம்பி இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications