99.9% தூய வெள்ளி.. பிரதமர் மோடி வெளியிட்ட ராஜேந்திரனின் நினைவு நாணயம்.. இத்தனை சிறப்புகளா?
அரியலூர்: பிரதமர் நரேந்திர மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளார். அந்த நினைவு நாணயத்தின் சிறப்புகள் என்ன என்பது தொடர்பாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தைத் திறந்து வைத்த அவர், இன்று அரியலூர் மாவட்ட கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். சோழீஸ்வரரை வழிபட்ட அவர், ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை நாளில் பங்கேற்றார். மோடியின் வருகை காரணமாக இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன்பின் ராஜேந்திர சோழன் மற்றும் ராஜராஜன் சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனிடையே ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார். இந்த நாணயம் ரூ.1,000 மதிப்பை கொண்டதாகும். அதன் முன்புறம் இந்தியாவின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
தமிழில் வாய்மையே வெல்லும் என்று பொருள்படும் சத்யமேவ ஜெயதே என்று வாகசம் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலாக அசோக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் தேவநாகரியில் பாரத் என்றும், வலதுபுறத்தில் இந்தியா என்று பதிக்கப்பட்டுள்ளது. அசோக சின்னத்திற்குக் கீழ், ரூபாய்க்கான அடையாளமும், ஆயிரம் என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாணயத்தின் பின்புறம் பேரரசர் ராஜேந்திர சோழன் 1ல் கடற்படையை காட்சிப்படுத்தும் வகையில், நாணயத்தின் மையத்தில் உருவகம் பதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பேரரசர் ராஜேந்திர சோழன் 1ன் ஆயிரம் ஆண்டுகள் கடற்படை பயணம் என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகரி வரி வடிவில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நாணயம் வட்ட வடிவில் 44 மிமீ உள்ளது. அதேபோல் 99.9 சதவிகிதம் தூய வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் எடை 40 கிராமமாகும். அதேபோல் பிரதமர் மோடி, உலகம் முழுவதும் நீர் மேலாண்மைக்கு முன்னோடி சோழர்கள். கங்கையின் மகத்துவத்தை உணர்ந்தவர் ராஜேந்திரன். காவிரிக் கரைக்கு கங்கைக் கரையில் இருந்து வந்துள்ளேன். நான் காசியின் பிரதிநிதி, கங்கையின் மகன், காவிரிக் கரைக்குக் கங்கை நீரைக் கொண்டு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications