அடிதடி பரபரப்புக்கு இடையே.. ஜெயக்குமார் ஆவேசம்.. இந்த பூச்சாண்டிக்கு நான் பயப்பட மாட்டேன் என பேட்டி
சென்னை: ஒற்றை தலைமை குறித்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது, இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வாய் வார்த்தையில் தொடங்கிய இந்த சம்பவம் தற்போது கைகலப்பு வரை சென்றுவிட்டது.
இந்த ஒற்றைத் தலைமை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதால்தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் என ஓபிஎஸ் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம்சாட்டியிருந்தார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி
மேலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி உள்ளே பேசியதை வெளியே செய்தியாளர்களுக்கு சொல்லிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதாவது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கையெழுத்திட வேண்டும் என்பது விதி.

அதிமுக பொதுக் கூட்டம்
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக பொதுக் கூட்ட தீர்மானத்தை இறுதி செய்ய தலைமை குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயக்குமார் ஆதரவாளர் மீது தாக்குதல்
இதையடுத்து ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் அவரை பத்திரமாக மீட்டு உள்ளே அழைத்து சென்றனர். அப்போது பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்துவிடம் "எடப்பாடி ஆளா நீ" என கேட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை கடுமையாக தாக்கி ரத்தம் வரவழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பர ரகசியமா
இந்த நிலையில் தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செயே்தியாளகூறுகையில், ஒற்றைத் தலைமை குறித்து நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? வெளிப்படைத்தன்மையோடு பேசினேன். நான் சிதம்பர ரகசியத்தை எதையும் உடைக்கவில்லை.

ஓபிஎஸ்ஸுக்கு ஜெயக்குமார் மறைமுக பதில்
இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஒற்றையா, இரட்டையா என்பதை மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்வார்கள். தொண்டர்களின் மனநிலையை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூறினர் என்றார் ஜெயக்குமார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதை வெளியே சொன்ன ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் ஆதரவாளரா என்று கேட்டு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சிலர் அதிமுக பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு ரத்தம் வெளியாகி இருந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதையெல்லாம் குறிப்பிட்டு ஜெயக்குமார் பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்











Click it and Unblock the Notifications