மேடையிலேயே பேசிய ஐஸ்வர்யா.. 2 மாதத்தில் தலைகீழாக மாறிய உறவு.. தனுஷுக்கு சென்ற புகார்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்து இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இணையம் முழுக்க பலர் இதற்கான காரணங்களை விவாதித்து வருகிறார்கள்.

முக்கியமாக தனுஷின் சினிமா தொடர்புகள் காரணமாக இந்த விவாகரத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று பலர் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். தனுஷ் சமீபத்தில் அத்ரேங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்தார். இதில் சாரா அலிகான் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு பின்புதான் தனுஷுக்கும் அவரின் மனைவி ஐஸ்வர்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

தனுஷ் வரிசையாக சில இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். இதனால் அவர் வீட்டிற்கு வருவது ஒரு பக்கம் குறைந்துள்ளது. அதேபோல் சில இந்தி படங்களில் தனுஷ் சைன் செய்வதற்கு முன் அதை பற்றி தனது குடும்பத்தில் யாரிடமும் தனுஷ் பேசவில்லை என்று கூறப்படுகிறது. முன்பெல்லாம் தமிழ் படங்களில் நடிக்கும் முன் தனுஷ் அதை பற்றி தனது மனைவியிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்தி படங்களில் நடிப்பதை பற்றி அவர் தனது மனைவியிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 குடும்ப உணவு

குடும்ப உணவு

இதனால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறதாம். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது பெரிய சண்டையாக வெடிக்கவில்லை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதே நாளில் நடிகர் தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று எல்லோரும் மொத்தமாக சென்றுள்ளனர். இவர்களின் குழந்தைகளும் டெல்லிக்கு சென்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் பின் டெல்லியிலேயே சிறிய பார்டியும் நடந்துள்ளது. அதன்பின் எல்லோரும் ஒன்றாக போயஸ் கார்டனில் ரஜினி இல்லத்திற்கு வந்து இருக்கிறார்கள்.

அண்ணாத்தே படம்

அண்ணாத்தே படம்

ரஜினியின் இல்லத்தில் குடும்பத்தோடு சேர்ந்து அண்ணாத்தே படத்தை ரிலீஸ் ஆகும் முன் ஸ்பெஷல் ஷோ பார்த்து உள்ளனர். இதில் தனுஷும் உடன் இருந்திருக்கிறார். தனுஷ் மகன் கேட்டதால்தான் இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோவே போடப்பட்டு இருக்கிறது. இதுவரை இவர்களுக்கு இடையில் எல்லாமே நன்றாக சென்று கொண்டு இருந்தது. அதாவது அவ்வப்போது கருத்து வேறுபாடு வந்தாலும் தனுஷ் - ஐஸ்வர்யா இடையே பெரிய அளவில் நேரடியாக மோதல்கள் ஏற்படவில்லையாம்.

2 மாதம் முன்

2 மாதம் முன்

சரியாக இரண்டு மாதம் முன் தனுஷ் நடித்த இந்தி படமான அத்ரேங்கி ரே படத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் ஐஸ்வர்யா தனுஷை பாராட்டி பேசினார். மேடையிலேயே புகழ்ந்து ஐஸ்வர்யா பேசினார். அப்போது இவர்களுக்கு இடையில் மோதல் இல்லை. அதிலும் தனுஷ் இன்னொரு பேட்டி ஒன்றில் அன்பான மனைவி என்று கூறி ஐஸ்வர்யாவை பாராட்டியும் இருந்தார். இந்த பாராட்டு வெறும் 2 மாதங்களுக்கு முன் கொடுக்கப்பட்டதுதான். ஆனால் இடைப்பட்ட 2 மாதத்தில் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தனுஷ் புகார்

தனுஷ் புகார்

தனுஷ் பற்றி சென்ற சில கிசுகிசுக்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். தனுஷின் சினிமா தொடர்புகள் பற்றி ஐஸ்வர்யாவிடம் சிலர் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகசில நடிகைகளிடமும் ஐஸ்வர்யா கேள்வி எழுப்பி இருக்கிறாராம். இந்த நிலையில் ஐஸ்வர்யா இப்படி கேள்வி கேட்டது தொடர்பாக ஒரு நடிகை தனுஷிடமே நேரடியாக சென்று புகார் கொடுத்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. உங்கள் மனைவி என்னிடம் இப்படி விசாரித்தார் என்று தனுஷுக்கு புகார் சென்றுள்ளதாம். இதன்பின்பே தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

Recommended Video

    Dhanush & Aishwarya Announced their Separation | தலைவர் வருந்தபடுவார்!!
    சண்டை மோதல்

    சண்டை மோதல்

    கடந்த 2 மாத இடைவெளியில் இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும். அதனால் வாக்குவாதம் முற்றி, அது கடைசியில் விவாகரத்தில் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 2 மாதத்திற்கு முன் நட்பாக இருந்த இவர்கள் உறவு இந்த 60 நாட்களில் தலைகீழாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது. ஆனாலும் உண்மையில் இதுதான் இவர்களின் பிரிவிற்கு காரணமா.. அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது போக போகத்தான் தெரியும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+