சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாலையே வந்த ஓ ராஜா.. அந்த வாசகத்தை நீக்குங்க! கண்ணீர்விட்ட சசிகலா.. "ஸ்டன்" ஆகி நின்ற சொந்தங்கள்

Google Oneindia Tamil News

சென்னை; தஞ்சாவூருக்கு அரசியல் பயணமாக சென்று இருக்கும் சசிகலா தனது கணவர் நடராஜனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Recommended Video

    அதிகாலையே வந்த ஓ ராஜா.. அந்த வாசகத்தை நீக்குங்க! கண்ணீர்விட்ட சசிகலா.. ஸ்டன் ஆகி நின்ற சொந்தங்கள்

    சசிகலா தற்போது அதிமுக கட்சியை கைப்பற்றும் விதமாக இரண்டாம் கட்ட அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். கடந்த வாரம் தென் மண்டலத்திற்கு பயணம் மேற்கொண்டவர், திருச்செந்தூரில் சிறப்பு யாகங்களை செய்தார்.

    அதை தொடர்ந்து தற்போது சென்னையில் இருந்து தஞ்சைக்கு சாலை மார்க்கமாக சென்றார். செல்கிற வழியில் பல்வேறு நிர்வாகிகளை இவர் சந்தித்து பேசினார். அதோடு ஆதிபராசக்தி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடத்தினார்.

    ம. நடராஜன் நினைவு தினம்.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறாரா சசிகலா?.. கலக்கத்தில் அதிமுக தலைமை? ம. நடராஜன் நினைவு தினம்.. இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறாரா சசிகலா?.. கலக்கத்தில் அதிமுக தலைமை?

    பூஜை ஏற்பாடு

    பூஜை ஏற்பாடு

    இதையடுத்து இன்று காலை சசிகலா விளார் பைபாசில் இருக்கும் நடராஜன் நினைவிடத்திற்கு வந்தார். அதிகாலை 6.30 மணி அளவில் சசிகலா அங்கே நினைவஞ்சலி செலுத்த வந்தார். நடராஜனின் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி இது என்பதால் அங்கு கொஞ்சம் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சந்தானம் + காவி கலந்த புடவை கட்டி இருந்த சசிகலா அங்கு வந்து கோ பூஜை நடத்தினார். பசுவை வைத்து நடக்கும் பூஜை ஆகும் இது.

     சசிகலா வந்தார்

    சசிகலா வந்தார்

    சசிகலா வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே.. அதிகாலையிலேயே ஓ ராஜா வந்துவிட்டார். திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்த ராஜா தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இவர் அதிகாலையிலேயே விளார் பைபாஸ் வந்துவிட்டார். அங்கு நினைவிடத்தில் பூ வைத்து அலங்காரம் செய்வதற்கான ஏற்பாடுகளை இவர் நேரடியாக கவனித்துக் கொண்டார். அதோடு பூஜைக்கான முன்னேற்பாடுகளையும் ஓ ராஜா முன்னின்று கவனித்துக் கொண்டார்.

    கண்ணீர் விட்டபடி இருந்தார்

    கண்ணீர் விட்டபடி இருந்தார்

    இதையடுத்து பூஜையில் கலந்து கொண்ட சசிகலா அங்கேயே சேர் ஒன்றில் அமர்ந்து கண்ணீர்விட்ட படி இருந்தார். மற்றவர்கள் சுற்றி நிற்கவும், தரையில் அமர்ந்து இருக்கவும் சசிகலா மட்டும் கண்ணீர்விட்டபடி இருந்தார். அதன்பின் எழுந்து வந்து நடராஜன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் அதன் மீது பூவை தூவி கண்ணீர்விட்டபடி வேண்டிக்கொண்டு இருந்தார். அருகிலேயே ஓ ராஜா நின்று அவருக்கு ஆறுதல் அளித்தார்.

    திரும்பி போறப்ப இருக்க கூடாது

    திரும்பி போறப்ப இருக்க கூடாது

    இந்த நிகழ்வில் சிஆர் சரஸ்வதியும் உடன் இருந்தார். இதையடுத்து வெளியே வந்த சசிகலா.. நான் வரும் போது வழியில் கட் அவுட்டில் என்னை கொண்டாடுவது போல நிறைய வாசகங்கள் இருந்தது.. இது என்ன கொண்டாட்ட நிகழ்வா? இது நினைவு நாள் என்பதை மறக்க வேண்டாம். அந்த வாசகங்களை நீக்குங்கள் என்று குறிப்பிட்டார். இதையடுத்து குறிப்பிட்ட சில அரசியல் வாசகங்கள் டேப் வைத்து மறைக்கப்பட்டது. சில கட் அவுட்கள் நீக்கப்பட்டது.

    முன்னால் நின்றார்

    முன்னால் நின்றார்

    இந்த நிகழ்வு முழுக்க ஓ ராஜா முன்னால் நின்றதுதான் ஹைலைட்டே. சசிகலா, நடராஜனின் நெருங்கிய சொந்தங்கள் கூட இந்த நிகழ்வில் முன்னால் நிற்கவில்லை. ஆனால் ஓ ராஜா நடராஜன் நினைவிடத்திற்கு முன் நின்று அனைத்து பணிகளையும் கவனித்தார். அதேபோல் குரூப் போட்டோவிலும் சசிகலா, ஓ ராஜா, சிஆர் சரஸ்வதி ஆகியோர் ஒன்றாக நின்றனர். உறவினர்களை விட ஓ ராஜாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை பார்த்து சசிகலாவிற்கு நெருக்கமான சொந்தங்களே.. என்ன இது புதுசா இருக்கு.. என்று ஸ்டன் ஆகி நின்றனர்.

    English summary
    What Sasikala did in Thanjavur today in her husband Natarajan's memorial?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X