Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியாவில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.. புதுசு புதுசா வருகிறார்கள்.." விளக்கிய ஆளுநர் ரவி

இந்தியாவில் சாதிகள் எண்ணிக்கை உயர்ந்து விட்டதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, 1951ல் இருந்ததை விட இப்போது சாதிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் புதுப்புது அடையாளத்துடன் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி பொது நிகழ்ச்சிகளில் கூறும் கருத்துகளைப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் அவர், கார்ல் மார்க்ஸ் பற்றிப் பேசியது சர்ச்சையானது.

அதாவது, கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்தது என்றும் இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இதற்கிடையே ஆளுநர் ரவி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தனியார் தொண்டு நிறுவனத்தினர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நமது கலாச்சாரத்திலேயே சமூக சேவை என்பது இருக்கிறது. நாம் நமக்காக மட்டுமின்றி பிறக்குக்காகவும் வாழ வேண்டும் என்பதையே நமது மூதாதையர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர்.இதுதான் நமது பண்பு. இந்த பண்பு நமது மரபணுவிலேயே உள்ளது.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

இந்த நாகரீக சமூகக் குடும்பமே பாரத் என்று அழைக்கப்படுகிறது. நாம் 2017இல் சுதந்திரம் பெற்று நூற்றாண்டு ஆகும் போது, நற்குணங்களில் உலகிற்கே தலைசிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ வேண்டும். நாம் வரலாற்றைப் பார்த்தால்.. ஐரோப்பிய நாடுகளும் ஒரு கட்டத்தில் உளகிலேயே வலிமையாக இருந்துள்ளன. ஆனால், அப்போது அது காலனியாதிக்கத்திற்கு வழிவகுத்தது. சர்வதேச அளவில் அப்போது மிகப்பெரிய அளவில் சுரண்டல்கள் நடந்தன.. அமெரிக்காவும் சோவியத் யூனியன் வலிமையான போது, இரு நாடுகளும் கொள்கைகளில் வேறுபட்டு நின்றன. இதுவும் மக்களுக்குத் துயரத்தைத்தான் கொடுக்கின்றன. ஒன்று ஜனநாயகத்தின் பெயராலும், மற்றொன்று பொதுவுடைமை பெயராலும் நடந்தன.

சீனா

சீனா

இப்போது சமீப காலமாகச் சீனா வலிமை பெற்று வருகிறது. இதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இலங்கையில் அவர்கள் செய்ததை வைத்தே நாம் உணர்ந்து கொள்ளலாம்.. அதேநேரம் சர்வதேச அரங்கில் இந்தியா வலிமை பெறும்போது இதெல்லாம் நடக்காது.. இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து நாடுகளுமே அதற்குச் சொந்தம்தான்.. கொரோனா காலத்தில் உலக நாடுகளே திணறின. ஆனால், அப்போது வேக்சின்களை உருவாக்கி நாம் உலக நாடுகளுக்கு சப்ளை செய்தோம்.

வேக்சின்

வேக்சின்

பல நாடுகள் வேக்சின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கும் போகு, நாம் 150 நாடுகளுடன் வேக்சின்களை பகிர்ந்தோம். நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத போதும், நாம் பகிர்ந்தோம். அதுதான் இந்தியா.. உலகில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் இப்போது குரலற்று இருக்கின்றன. அவையெல்லாம் இந்தியா தங்கள் குரலாக இருக்கும் என்றே நம்புகின்றன. நமது நாட்டின் பொருளாதாரம் அனைத்து நாடுகளையும் வியக்க வைக்கிறது. இதுதான் நாம் ஏற்படுத்தும் நம்பிக்கை.. நாம் உலகத்தைப் பிளவுபடுத்தி, துண்டுகளாக பார்க்கவில்லை. ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம்.

 சாதிகள் எண்ணிக்கை

சாதிகள் எண்ணிக்கை

1951ல் இருந்ததை விட இப்போது சாதிகள் எண்ணிக்கை இருமடங்காகிவிட்டது. பழங்குடிகளின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. பலரும் புதுப்புது அடையாளங்களுடன் வருகிறார்கள்.. நாம் அடுத்தவர்களின் கண்களாகச் செயல்படுவதால் தான் இந்த பிரிவுகள்.. சமூகம் பிரிக்கப்படுகிறது. ஆனால், இப்படியிருக்கக் கூடாது. ஒரே குடும்பமாக ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். இங்குள்ள பிரச்சினைகளை குடும்பத்தின் பிரச்சினையாகக் கருதித் தீர்க்க வேண்டுமே பிரித்துப் பார்க்கக் கூடாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+