"அமித் ஷா அட்வைஸ் செய்தார்".. முதல்வருக்கு ஆளுநர் ரவி எழுதிய 2வது கடிதத்தில் இருந்தது என்ன? பின்னணி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் நடவடிக்கையை திரும்ப பெறுவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்து இருந்த நிலையில் அது தொடர்பான கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய இரண்டாவது கடிதத்தில் அவர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த கடிதம் பற்றி அதிகாரபூர்வ செய்தி குறிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை.

செந்தில் பாலாஜியை நீக்கிய போது வெளியிட்ட செய்தி குறிப்பை போல.. அவரின் நீக்கத்தை திரும்ப பெற்ற போது ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பை வெளியிடவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் நடவடிக்கையை திரும்ப பெறுவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்து இருந்த நிலையில் அது தொடர்பான கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த இரண்டாவது கடிதம் ஒரு பக்கம் மட்டுமே உள்ள சின்ன கடிதம் ஆகும். அந்த கடிதத்தில், இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் என்று மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அட்டர்னி ஜெனரலை அணுகி கருத்து கேட்க உள்ளேன். இதற்கிடையில், அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு, என்னிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அமித் ஷாவின் அறிவுரையால் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார்.
என்ன நடந்தது?: அமலாக்கத்துறை வழக்கிற்கு இடையே நேற்று இரவு திடீரென செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். செந்தில் பாலாஜி பதவியில் தொடர கூடாது. அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தால் அவர் மீதான விசாரணை சரியாக நடக்காது.
அவரின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது. அதனால் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .

ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.
ஆனாலூம் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .












Click it and Unblock the Notifications