அவங்கள "தொடாதீங்க".. போலீசுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. அமலான புதிய விதி.. சபாஷ் தமிழக அரசு
3ம் பாலினத்தவர்க்கு தொல்லை தரக்கூடாது என்று உத்தரவு வந்துள்ளது
சென்னை: "தேவையில்லாமல் 3ஆம் பாலினத்தவரை தொந்தரவு செய்ய கூடாது" என்று காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த சுற்றறிக்கையும் காவல்துறைக்கு பறந்துள்ளது... இதற்கான பின்னணி என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்..!
கடந்த 2016-ல் நடந்த சம்பவம் ஒன்று:
சூளைமேடு நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் திருநங்கை தாரா... இவர் வயிற்றுப் பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்து வந்தவர்..
இவர் ஒருநாள் காலை திடீரென பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்தார்... உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதற்கு காரணம் தி.நகர் போலீசார்தான் என்பது தெரியவந்தது..

திருநங்கை தாரா
தாராவின் டூவீலர், செல்போனை, பாண்டிபஜார் போலீஸார் ஏதோ ஒரு காரணத்துக்காக கைப்பற்றியுள்ளார்கள் போலும்.. அப்போது தாராவை போலீசார் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதில் மனமுடைந்த தாரா, அங்கேயே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.. அங்கே டியூட்டியில் இருந்த போலீஸார், தாராவைப் பார்த்து "செத்துப்போ" என்று சொன்னாராம்.. நெருப்பு பற்றிக் கொண்டு எரிந்தும் தாராவை அவர் காப்பாற்றவுமில்லை.. ஒன்றுதிரண்ட திருநங்கைகள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டமும் செய்தனர். இது மிகப்பெரிய பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.

செல்போன்
அதேபோல, கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு சம்பவம் கோவையில் நடந்தது.. அந்த திருநங்கை பெயர் உமாஸ்ரீ.. தொண்டு பணிகள், சமூக பணிகளை செய்து வந்தவர்.. தன்னுடைய செல்போனை காணவில்லை என்று போலீஸ் அதிகாரி மூவேந்தன் வேல்பாரியிடம் புகார் தந்துள்ளார்.. ஆனால், செல்போன் குறித்து விசாரிக்காமல் அந்த திருநங்கையிடம் தவறாக பாலியல் ரீதியாக பேசி உள்ளார்... பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டிருக்கிறார்.. விசாரணை என்ற பெயரில் வீடு வரை வந்து தொல்லை தந்துள்ளார்..

உமாஸ்ரீ
அதற்கு உமாஸ்ரீ மறுக்கவும் மோசமாக தாக்கியும் இருக்கிறார். இறுதியில் வேறு வழிதெரியாமல், உமாஸ்ரீ கோவை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து, செல்போனை கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்... காவலர் ஒருவரே இப்படி செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று கண்ணீர் வடித்துவிட்டு சென்றார்.. அவரை சஸ்பெண்ட் செய்தனர் மேலதிகாரிகள்.. இதெல்லாம் ஒரு உதாரணங்கள்தான்..

திருநங்கை
தொடர்ந்து இப்படி திருநங்கைகளுக்கு காவல்துறையிலேயே பாதுகாப்பு இல்லாததால்தான், விஷயம் மதுரை ஹைகோர்ட் வரை சென்றுவிட்டது.. மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களையும் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.... இதையடுத்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது காவல்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது..

ஓரினசேர்க்கை
இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.. ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு பல சீர்திருத்தங்களை செய்து வரக்கூடிய மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக இருந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரின சேர்க்கையாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்று கோர்ட் கூறியது.. அதுமட்டுமல்ல, ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை கையாளும்போது சுயகட்டுப்பாடுடனும், வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கண்டிப்பு காட்டியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

திருநங்கை
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக காவல்துறைக்கு முக்கிய உத்தரவு ஒன்று பறந்துள்ளது.. அதுகுறித்த சுற்றறிக்கையில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நடைமுறை விதிகள் தொடர்பான நடத்தை விதி 24 சி என்ற பிரிவு சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.. நடத்தை விதி சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே
திருநங்கைகளை காவல்துறை விசாரணை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணை
மேலும் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.. ஆக, விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளை தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என தமிழக காவல்துறையில் புதிய விதி சேர்க்கப்பட்டிருப்பது திருநங்கைகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications