Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு நிம்மதி.. 20க்கு அரிசி, கோதுமை வருதா? மத்திய அரசு சூப்பர் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் நீண்ட கால 2 கோரிக்கைகள் விரைவில் நிறைவேற போகின்றன.. இது தொடர்பாக மத்திய அரசு மிகுந்த நம்பிக்கையையும், உறுதியையும் தமிழக அரசிடம் தந்திருக்கிறது.. என்ன நடந்தது? என்ன 2 கோரிக்கைகள்?

தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, 1,038 டன்னாக மத்திய அரசு கடந்த வருடம் குறைத்திருந்தது.. இதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் கோதுமை வழங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டது.. இது தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலக்கத்தையும் நீண்ட நாட்களுக்கு தந்து வந்தது.

Ration Shops Wheat rice price Central Government

தமிழக அரசு: இதற்கு பிறகுதான், தமிழக அரசு இது தொடர்பான நடவடிக்கையை கையில் எடுத்தது. "தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமை வழங்க வேண்டும்" என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அத்துடன், இதுதொடர்பாக, தமிழக அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் நேரிலேயே சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள்.. இதற்கு பிறகுதான், தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் அன்று சொன்னபோது, "முன்னுரிமை கார்டுதாரர்கள் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ப கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. இது, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தவறு சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கியதுபோலவே, மாத மாதம், 8,500 டன் கோதுமையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

கோதுமை ஒதுக்கீடு: எனினும், கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தில் விற்கப்படும் அரிசியின் விலையை கிலோவிற்கு ரூ.20 ஆக குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளது.. இது தொடர்பாக, நேற்றைய தினம், மத்திய நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறைத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, பல்வேறு வகைகளில் நிலுவையில் உள்ள உணவு மானிய தொகையான ரூ.3,191 கோடியை விடுவிக்கவும் அவா் கோரிக்கை விடுத்தாா். இது குறித்த விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும், மத்திய அமைச்சரிடம் சக்கரபாணி அளித்தார்.

உணவுத்துறை: இந்தநிகழ்வின்போது, மாநிலங்களவை திமுக குழுத்தலைவா் திருச்சி சிவா, மத்திய உணவு, பொது விநியோகத்துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா, தமிழக உணவுத்துறை செயலா் டாக்டா் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் அண்ணாதுரை, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

அமைச்சர் அளித்த மனுவில் உள்ளதாவது: "நெல் அரவை மானியம் ரூ.2348.34 கோடி, கேழ்வரகு மானியம் ரூ.2.04 கோடி, பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மதிய உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிலுவைத்தொகை ரூ.13.17 கோடி, தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (என்எப்எஸ்ஏ), பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான நிலைத் தொகை நிலுவை ரூ.786.73 கோடி மற்றும் சர்க்கரைக்கான மானியம் ரூ.40.36 கோடி என ரூ.3,160.64 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்.

மத்திய அரசு: மாநிலத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி தவிர்த்து மாதம் தோறும் 75 ஆயிரம் டன் கூடுதல் அரிசி, பொது விநியோகத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டங்களுக்கு தேவைப்படுகிறது. கடந்த ஜூலை 9-ம் தேதியிட்ட மத்திய அரசின் கடிதத்தில் அந்த அரிசி கிலோ ரூ.28-க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அரிசியை ஏற்கெனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20-க்கே வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.

மாநிலத்துக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் கேழ்வரகை தவிர்த்து 2,756 டன் கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த கேழ்வரகை, வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.

உணவுக்கழகம்: பொதுமக்களின் உணவுப்பழக்கத்தின் மாற்றத்தின் காரணமாக கோதுமை நுகர்வு அதிகரித்து வருகிறது. தமிழகம் கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் அல்ல. உணவுக் கழகத்தின் விநியோகத்தை சார்ந்தே உள்ளது. மாதம் தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை தமிழகத்துக்கு சராசரியாக தேவைப்படுகிறது.

ஆனால், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம் ரூ.8576.02 டன் கோதுமையே மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்குகிறது. எனவே, மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 2013-14,15-16 முதல் 2019-20 வரையிலான கரீப் கொள்முதல் பருவத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பான கணக்குகளை இறுதி செய்து, மீதமுள்ள தொகையை அரசுக்கு வழங்க வேண்டும்.

நெல் அரவை: நெல் அரவை மற்றும் கேழ்வரகுக்கான தற்காலிக பொருளாதார செலவுத் தொகை அதாவது மண்டி தொழிலாளர், போக்குவரத்து உள்ளிட்டவற்றை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்," என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவிலுள்ள கோரிக்கைகளை மத்திய அரசின் அதிகாரிகளிடம் ஆலோசித்த மத்திய அமைச்சா் மானிய விவரங்களை ஒத்திசைவு செய்து விரைவில் விடுவிப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்.. ஆனால், கோதுமை விளைச்சல் ஒரே சீராக இருப்பதால் ஒதுக்கீட்டைக் கூட்டுவதில் சிரமம் உள்ளதாகவும், இருந்தாலும் இதை அதிகரிக்க பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி உறுதியளித்துள்ளார்.

இரட்டிப்பு மகிழ்ச்சி: அந்தவகையில், கோதுமையின் அளவு அதிகரிப்பதுடன், அரிசியை கிலோ ரூ. 20-க்கு வழங்கவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இதனால், கோதுமை, அரிசிக்கு, தமிழக ரேஷனில் எப்போதுமே தட்டுப்பாடு வராது என்றும் நம்பப்படுகிறது.

கோதுமை: முன்னதாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச தானியம் வழங்குவதில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில், எஃப்சிஐ நிறுவனத்திடம் இருந்து அரிசியை நேரடியாக வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார்.. அதேபோல, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் 2024 ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 81.35 கோடி பயனாளி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதும் நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+